பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரத்தின் வரலாறு 17

  • ஆதிபெளதிகம்’ என்றும் 'ஆதிதைவிகம் என்றும் மூன்று வகையாகப் பிரித்துப் பேசப்பெறும். ஆதியாத் மிகம் என்பது, தன் உடலையும் மனத்தையும்பற்றிவரும் துன்பங்கள். இது சரீர ஆதியாத்மிகம் மன ஆதியாத் மிகம் எனப்படும். முன்னது உடலைப் பற்றிக்கொண்டு வரும் தலைவலி, நெஞ்சுவலி, காய்ச்சல், பெருநோய், காசநோய் முதலிய பிணிகளாகும். பின்னது காமம், குரோதம், பொறாமை முதலிய வேண்டப் பெறாத பண்பு களாகும். ஆதிபெளதிகம்' என்பது, பிசாசம், கொடிய விலங்குகள், மனிதர், இராக்கதர் முதலியவர்களால் நேரி டும் துன்பங்களாகும். ஆதிதைவிகம்' என்பது, காற்று, மழை, வெயில், இடி, மின்னல், நிலநடுக்கம் முதலியவற் றால் தெய்வசங்கற்பமாய் உண்டாகும் பேரிடர்கள் ஆகும். இவ்வகைத் துன்பங்கட்குக் காரணம் என்ன? 'அர்த்த பஞ்சக ஞானம்' இன்மையே என்று சாத்திரங்கள் சாற்றும்.

இங்ங்ணம் சேதநர்கள்?-நாம்-நம்முடைய வினை களால் பிறப்பு-இறப்பு என்னும் சுழிகளில் சிக்கித் தடு மாறித் தம் காலத்தைப் பயனற்ற வழிகளில் கழித்தலைக் கானும் அருட்பெருங்கடலான ஈசுவரனால் தாங்க முடிய வில்லை. கருணாநிதி என்ற பெயர் தனக்குப் பொருந்த வேண்டுமே என்ற கவலை கொள்ளுகின்றான். எல்லா உயிர்களோடும் இரட்சக-இரட்சிய சம்பந்தம்” உடைய எம்பெருமான் எப்படி வாளா இருக்க முடியும்? சேத நர்கள் தங்களை அறிந்து கொள்ளவும், பகவானாகிய தன்னை

5. இயல்-1, அடிக்குறிப்பு-11 காண்க.

6. சேதநர்கள்-அறிவுடைய ஆன்மாக்கள்.

7. இதனை ஈச-ஈசத்தவ்ய சம்பந்தம்’ என்றும்

சாத்திரங்கள் குறிப்பிடும். ப.க.-2