பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரத்தின் வரலாறு 2、

இறுதியிலும் தண்குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட்டேனே' (தி நெ. தா. 29) பேசு வதால் இந்த ஆழ்வார்க்கு மற்றைத் திருப்பதிகளெல்லா வற்றினும் திருக்குடந்தையின் மீதுள்ள அன்பு அளவற்றது என்பதை அறிய முடிகின்றது ()ே.

ஞானத்தின் திருவுருவாகிய வராகப் பெருமானின் திரு வருளால் தான் உய்வதற்கு உரிய நாராயண நாமத்தை உச்சரிக்க வழி ஏற்பட்டது என்று பேசுகின்றார் (4).

'எம்பெருமான் கருணையைத் திண்ணியதாகப் பெற்ற தனால் நல்லது, தீயது என்பவற்றை ஆராய்ந்துணரும் ஞானம் பெற்றேன். செல்கதிக்கு அமைந்தேன். இப் போது நான் நாராயண நாமத்தை அநுசந்திக்க வேண்டும் என்று நினைக்கும் போதே எனது இதயம் நீர்ப்பண்ட மாக உருகுகின்றது; அத்திருநாமத்தை வாய்விட்டு நவிற் றத் தொடங்கினால் குரல் தழுதழுத்துப் போகின்றது; ஆனந்தக் கண்ணிர் உடம்பெங்கும் முத்து மாலையிட்டாற் போல் பெருகுகின்றது. இந்நிலையில் இரவு பகலும் நாராயண நாமத்தையே கூறி நிற்கின்றேன்’ என் கின்றார் (5).

‘அடியேனுக்குப் பல உபகாரங்கள் செய்தவனும், அடியே லுக்குத் தந்தையும், அடியேனுக்கு எல்லா உறவு முறையும் பகைவர்களைப் போக்கி அடியேனை ஆண்டவனும், அடி யேனின் வாழ்க்கையில் எல்லாமாய் இருப்பவனும், சங்கல் பத்தாலும் சரமாரி பொழிவதாலும் இராட்சதப் பூண்டு களைக் கிழங்கெடுத்தவனுமான சர்வசுவாமி எழுந்தருளி யிருக்கும் பரம போக்கியமான தஞ்சை மாமணிக் கோயி லைத் தொழுது எல்லாவித உறவுகளும் அவனே என்ற பொருளுக்கு வாசகமான நாராயண நாமத்தைக் காணப் பெற்றேன்' என்கின்றார் (6)