பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பரகாலன் பைந்தமிழ்

நூல்களைக் கற்றுக் கவிபாடும் கவிஞர்களை நோக்கி, "ஐயோ, நீங்கள் வாக்கு படைத்ததற்கு இதுதானா பயன்? கஞ்சப் பிரபுக்களைக் கற்பகத் தரு என்றும், திண்ணையில் கூட ஒதுங்க இடந்தராமல் துரத்தியடிக்குபவனைச் சர்வ இரட்சகன் என்றும் கூறி உங்கள் சொற்களை எச்சிலாக் கிக் கொள்வது தானோ நீங்கள் கற்ற கல்விக்குப் பயன்? திருக்குடந்தைப் பெருமானை வாயாரப் புகழ்ந்து போவீர் களாக. நாராயணா என்னும் நாமமே நான் உங்கட்கு உப தேசிக்கும் பொருள்' என்கின்றார் (7).

"அடியேன் செல்கதிக்கு உய்யும் நல்வழியை எண்ணி நாராயண நாமத்தை நல்துணையாகப் பற்றினேன்’’ என்கின்றார் (8).

'நாராயண நாமத்தை நாவினால் நவிற்றினால் இழிகுலம் நீங்கிப் புதியதொரு நற்குலத்தை நல்கும். நற்குலமுடையோன் என்பதற்குப் பிறப்பு ஒரு காரண மல்ல; பகவத்சம்பந்தமே காரணமாகும். வைணவ இலக்குமியைத் தரும். நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டதான் தன்னையே தான் வேண்டும் செல்வம் (பெரு. திரு. 5:9) என்பது குலசேகரர் வாக்கு. எத்தனைப் படுதுயர் இருந்தாலும் அடியார் திறத்தில் தரைமட்டமாக்கிவிடும். வீடு பேற்றையும் தரும். பகவதது பவம் தருவதற்குப் பாங்கான வலிமை தரும். இவன் அறியாத நல்லவற்றையெல்லாம் நல்கும். பால்நினைந் தூட்டும் தாயினும் ஆயின செய்யும் என்கின்றார் (9).

ஆகவே, தொண்டர்களை நோக்கி,

19. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்

பொவ்வா’ என்பது பொய்யா மொழி.