பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பரகாலன் பைந்தமிழ்

இது பற்றிய குறிப்பு ஒன்றும் இல்லை. ஆகவே, இஃது ஆராயத்தக்கது. யாரோ ஒருவர் திருமங்கையாழ்வாருக் குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற குறுகிய நோக்கு டன் இட்டுக் கட்டிய வரலாறுபோல் இது தோன்று கின்றது.

திருவரங்கரத்தில் திருப்பணி: நாகப் பட்டினத் திலுள்ள பெளத்தப் பள்ளியொன்றில் இருந்த பொற் சிலையொன்றினைக் களவிற் கைப்பற்றி அதனை உருக்கி விற்றதனால் கிடைத்த பொருளைக் கொண்டு திருவரங் கத்தில் அழகிய மணவாளனுக்கு விமானம், மண்டபம், கோபுரம், மதில் முதலிய கைங்கரியங்களைச் செய்தார் என்பது குருபரம்பரையில் காணும் செய்தி. பரகாலர் தம் பரிவாரத்துடன் நாகப்பட்டினத்தை அடைகின்றார். மிகவும் சிற்ப வேலைகளமைந்த புத்தவிகாரத்திற்குள் நுழையும் வழிகாணப் படவில்லை. விகாரம் முழுவதும் ஆய்ந்ததில் விகாரத்தின் உச்சியில் ஓர் இயந்திரம் இடை விடாது சுழன்று கொண்டிருப்பதைக் காண்கின்றார். அதை நிறுத்துவதற்குரிய வழியைச் சிந்திக்கின்றார். பல வாழைத்தண்டுகளைக் கொணர்ந்து சிறுசிறு துண்டு களாக்கி அச்சக்கரத்தில் இடைவிடாது கொடுத்துவர, அதன் நூல்கள் நடுவில் சிக்கிக் கொண்டதனால் அச்சக் கரப் பொறி அசையாமல் நின்று விடுகின்றது. பின்னர் அவ்வழியாகத் தம் சீடர்களுள் ஒருவரை விகாரத்தினுள் இறங்கச் செய்து அவரால் பொற்சிலையை எடுத்துக்கச் செய்கின்றார்.

சீடர் அதைக் கவரத் தொடங்குகையில் அந்தச் சிலை மந்திர பலத்தால் அவர் கைக்கு அகப்படாமல் அவ்விவ காரம் முழுவதும் ஒடத் தொடங்குகின்றது. புறத்திலி ருந்து திருமங்கை மன்னன் தந்த குறிப்பின்படி சீடர் அத னைக் கைப்பற்றி விடுகின்றார். உடனே அதன் ஆற்றல் குன்றி,