பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பரகாலன் பைந்தமிழ்

ஆழ்வார் புதைக்கப் பெற்ற சிலையை இரவோடு இரவாக எடுத்துக்கொண்டு திரு அரங்கம் வருகின்றார். அதனை விற்றுப் பணம் ஆக்குகின்றார்.” இந்தப் பணத் தைக் கொண்டு தம் திருப்பணியைத் தொடங்குகின்றார். திருப்பணி செய்து வருகையில் தொண்டரடிப் பொடி யாழ்வார் திருமாலை சேர்த்துவந்த இடம் நேர்படுகின் றது. அதனை ஒதுக்கி மதிலை அமைக்கின்றார் மங்கை மன்னன்.

இது பற்றிய ஆய்வு: திருப்பணி செய்ததை ஒப்புக் கொண்டாலும் நாகை செய்தி ஒப்புக் கொள்வதற்கில்லை.

1. 11-ஆம் நூற்றுாண்டின் தொடக்கத்தில் கடார வேந்தனான பூரீ மகா விஜயோத் துங்கவன்மனால் நாகையில் சூடாமணி பக்தவிகாரம்’ என்ற பெளத்தப் பள்ளி ஒன்று கட்டப் பெற்ற தென்றும், அதற்கு முதல் இராசராசன் கி.பி. 1008இல் ஆனைமங்கலம் என்ற சிற்றுார்தானமாக அளிக்கப்பட்ட தென்றும் கல்வெட்டு களால் அறியப் பெறுகின்றன. இச்செய்திகள் ஆழ்வார் 11-ஆம் நூற்றுாண்டின் பின்னிருந்தவர் என்று கொள்ள இடந்தருகின்றன. இது பொருந்தாது.

2. இராசராசன் மகன் முதல் இராசேந்தின் கி.பி. 1013 முதல் கி.பி. 1245 வரை ஆட்சி செய்தவன். ஆகவே அவன் ஆட்சியில் விகரரம் நன்னிலையில் இருந்தது என்பது தெளிவு. இக்காலத்தே நாதமுனிகளின் திருப் பெயரர் ஆளவந்தார் வதிந்த காலம் என்பர். ஆகவே, முற்கூறிய கொள்கைப்படி கொண்டால் திருமங்கை மன்னன் ஆளவந்தாருக்குப் பின்னிருந்தவர் என்று கொள்ள நேரும். இது முற்றிலும் பொருந்தாத தொன்று.

12. இந்த வரலாறு பட்டரின் ரீரங்க ராஜஸ்வத் திலும் (சுலோகம்-36) காணப்படுகின்றது.