பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியன் வாழ்க்கை - அகச்சான்றுகள் 盘惠

3. இந்த ஆழ்வார் காலத்திலும் பெளத்த சமணர் கள் சிற்சில இடங்களில் தலைமை பெற்று விளங்கினர் என்பதற்கும் அந்நூற்றுாண்டில் ஆண்ட மன்னர்களும் ஒரே சமயச்சார்பின்றிப் பல சமயங்கட்கும் உதவி புரிந்தனர் என்பதற்கும் இலக்கியச் சான்றுகள் உள்ளன. இ ந் த ஆழ்வாரே தமது திருமாலிருஞ்சோலைப் பதிகத்தில்,

புந்தியில் சமணர் புத்தரென் றிவர்கள் ஒத்தன. பேசவும் உவந்திட்டு

எந்தைஎம் மானார் இமையவர் தலைவர்

எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்'

என்று பாடியுள்ளமையே ஒரு சான்றாகின்றது.

இக்காலத்தில் தன்-வரலாறு நூல்கள் தோன்றிவருவது போல் அக்காலத்தில் தோன்றவில்லை. ஆனால் திருமங்கை யாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ் வார் கோதைநாச்சியார் போன்ற ஆழ்வார்கள் தம் வரலாறு பற்றிய ஒரு சில செய்திகளைத் தம் அருளிச் செயல்களில் பொதிந்து வைத்திருத்தலைக் காணலாம்.

13. பெரி. திரு. 9-8 9