பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வடநாட்டுத் திருத்தலப் பயணம்

தி ரு ம ந் திர ம் பெற்றதால் அந்த ம ந் தி ர ம் தோன்றிய இடமாகிய வதரியைக் கண்டு சேவிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ்வார்திருவுள்ளத்தில் கிளர்ந்தெழுகின்றது. இதனை முன்னரும் குறிப் பிட்டோம். வதரியை நோக்கிச் சென்ற ஆழ்வார் முதலில் திருப்பிரிதிக்கு வருகின்றார். பிரிதி எம்பெருமானை வழிபட்டு ஒரு திருமொழியால் (1.2) மங்களாசாசனம் செய்கின்றார். இத்திருமொழியிலுள்ள ஒவ்வொரு பாசுரமும் திருத்தல வருணனையையும் அங்குக் கோயில் கொண்டுள்ள எம் பெருமானையும் கூறுகின்றது. அதில் ஒரு பாசுரம்:

1. பிரிதி : இத்திருத்தலம் வதரிக்குக் செல்லும் வழியிலுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்திலுள்ள இது ஹிரித்துவாரத்திலி ருந்து 140 கல் தொலைவிலுள்ளது. இது ஜோஸிமடம் - நந்தப் பிரயாகை - என வழங்கப் பெறுகின்றது. இ ங் குத் தா ன் அழகாந்ந்தா, மந்தாகினி என்ற இரண்டு நதிகள் ஒன்று சேர்கின்றன. நந்தர் என்ற மாமின்னர் இங்குப் புல வேள்விகள் இயற்றியதாகவும், அதன் நினைவாகத் தம் ப்ெய்ரை இட்டதாகவும் சொல்லப்பெறுகின்றது. இந்த இடத்தில் கன்வ முனிவர் இருந்ததாகவும், து ஷ்ய ந் த ன்