பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருத்தலப்பயணம் 金?

என்பதையும் குறிப்பிடுகின்றார். எம்பெருமானையும் 'வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான் (7) என்றும், மைத்தசோதி எம் பெருமான் (6), வாசம்மல்கு தண் துழாயான் (8) என்றும் போற்றிப் புகழ்கின்றார். மாதிரிக்கு இத் திருமொழியில் ஒரு பாசுரத்தைக் காட்டு வோம்.

புலன்கள் நைய மெய்யில் மூத்துப்

போந்திருத் துள்ளம் எள்கி. கலங்க ஐக்கள் போத உந்திக் கண்ட பிதற்றாமுன் அலங்க லாய தண்துழாய்கொண் டாயிர

நாமம் சொல்லி வலங்கொல் தொண்டர் பாடி யாடும்

வதரி தணங்குதுமே(9ர்.

(புலன்கள் - இந்திரியங்கள்; நைய-சிதிலமாகும் படி; எள்கி-கலங்கி, ஐக்கள்-கோழைகள். கண்ட நெஞ்சில் தோன்றியவை எல்லாம்; அலங்கல்மாலை; வலங்கொள் தொண்டர்-சிறந்த அடி யார்கள்)

என்பது ஒன்பதாவது பாசுரம்.

முதுமைகாரணமாக பல அவல நிலைகள் தோன்று

வதற்கு முன்னர் வதரியை வணங்குமாறு ஆற்றுப்படுத்து

கின்றார் ஆழ்வார். வதரி நெடுமாலைப் பாடியும்,

பாட்டுக்குத் தகுதியாக ஆடியும் அநுபவித்தால் நீள் விசும்பு அருளப் பெறுவர் என்று பலனையும் சொல்லு கின்றார். இந்தப் பாசுரங்களில் கிருட் டிணாவதாரத்தில் பேய்ச்சி முைையூடு உயிரை வற்றவாங்கி உண்டதும் (1), காளையாகிக் கன்று மேய்த்துக் குன்றெடுத்து நின்றது மான தீரச்செயல்கள் அதுசந்திக்கப் பெறுகின்றன, ஆழ்கடலைக் கடைந்து அமுதம் கொண்ட செய்தியும்(6)