பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணி காட்டும் சுவைகள் 14 I யா8னத் தலையினின்றும் பெருகும் குருதியைப் பேய்கள் குடித்து இடி இடித்தாற்போல கொக்கரித்து ஆரவாரிப்பதையும் அந்தக் குருதி வெள்ளத்தில் யானைகளின் குறையுடலங்கள் மிதப்பதையும் காட்டும் மாயக் காட்சி இது. அடுத்து, மாயப் போராகிய பரணிப் போரையே கண் முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது முதுபேய்.

  • அடக்கம் அன்றிதுகி டக்க எம்முடைய

அம்மை வாழ்கஎன எம்மையார் ! கடக்கம் அன்றபயன் வென்று வென்றிகொள் களம்பெ ரும்பரணி யின்றுபார்.”* | அடக்கம்-அடங்குவது ; கடக்கம் - வங்காளத்திலுள்ள ஓர் ੋ ] முதுபேய் தன் மாய வித்தையால் போரில் இறந்துபட்ட குதிரைகளையும் வெட்டுண்டு துடிக்கும் வீரருடல்களையும், வெருவி யோடும் யானைகளையும், பெருகியோடும் உதிர வெள்ளத்தையும் காட்டுகின்றது.

  • துஞ்சி வீழ்துரக ராசி பார்iஉடல்

துணிந்து வீழ்குறைது டிப்பபார்! அஞ்சி யோடுமத யானே பார்!உதிர ஆறும் ஒடுவன நூறுபார்!'" துஞ்சுதல்-இறத்தல்; துரகம்-குதிரை.) என்ற தாழிசையால் இக்காட்சியினைக் காணலாம். அடுத்து, குருதி வெள்ளமும் அதில் மிதக்கும் பொருள்களும் காட்டப்பெறுகின்றன.

  • அற்ற தோளிவை,அ லைப்ப பார்!உவைய

ருத நீள்குடர்மி தப்பபார் ! இற்ற தாள்நரியி ழுப்ப பார்! அடியி ழுக்கு மூளையில்வ ழுக்கல்பார் !’** 37. தாழிசை.164. 38. தாழிசை-165. 39. தாழிசை.166.