பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணி காட்டும் சுவைகள் 1 49 (கண்வேல்-கண்ணுகிய வேல் ; வேது-புண்கட்குச் சூடான பொருளால் கொடுக்கும் ஒற்றடம் , வாய் மருத்துவால் எயிறு ஊறிய நீர்)

  • பொருங்கண் வேலிளைஞர் மார்பின் ஊடுருவு புண்கள் தீரஇரு கொங்கையின் கருங்கண் வேதுபட ஒற்றி மென்கைகொடு கட்டு மாதர்கடை திறமினே."

(கட்டும்-நோய்க்குக் கட்டுக் கட்டுதல்போல் இறுகத்தழுவும்) என்ற தாழிசைகளில் காட்டுவர். புறப்பொருள் அநுபவத்தை அகப்பொருள் அநுபவத்துடன் சுவைபட பிணைத்துக் காட்டும் கவிஞரின் திறன் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. இத்தகைய எடுத்துக்காட்டுக்களே இரண்டாவது பொழிவினை நோக்கி அறிந்து மகிழ வேண்டுகிறேன். சமநிலை : சமநிலை என்பது யோகியர் உள்ளத்தில் குடி கொண்டிருக்கும்(ஒரு நிலையாகும். அஃது ஒர் உயர்ந்த மனதிலே. ஆசையும் வெறுப்பும் இருக்கும்வரை மனத்திற்குச் சமநிலை ஏற் படாது என்பது தெளிவு. அதனுல்தான் பெரியோர்கள் சம நிலையை அடைய எத்தனையோ பிறப்புக்களில் தவம் செய்து பாடு படுகின்றனர். இந்தச் சுவைக்குக் கலிங்கத்துப் பரணியில்’ இடம் இல்லை. போரை நாடுபவர்களிடம் எங்ங்ணம் அமைதி காண்டல் இயலும் ? இறுவாய் : அன்பர்களே, இதுகாறும் சுவைகளைப்பற்றிய சில கருத்துக்களையும், கலிங்கத்துப் பரணியில் வரும் சுவைகளே யும் அறிந்து கொண்டோம். இலக்கியங்களே எல்லோரும் ஒரே விதமாகத் துய்த்தல் இயலாது. அதுபற்றியே இலக்கியங்களைப் படிப்பதிலும் பல கருத்துக்கள் எழுந்தன. நம் நாட்டவர் இலக் கியம் மனத்திற்கு இன்பம் அளிப்பதைவிட உள்ளத்திற்கும் அமைதியை நல்க வல்லதாக இருத்தல் வேண்டும் என்று கரு தினர். ஒரு காவியத்தைப் படிப்பதேைலா, அல்லது சிறந்த நாடகம் அல்லது சிறந்த படக்காட்சியைக் காண்பதனுலோ சுவைஞர்கட்குப் புலன்களின் தெளிவு ஏற்படுகின்றது. இலக் கியங்களில் காணப்பெறும் சுவைகள் இப்பயனேத் தரவல்லவை; சுவைகளால் புலன்கள் தெளிவடையும், உள்ளக்கனிவுடன் இலக் 56. தாழிசை-56,