பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பரணிப் பொழிவுகள் இத்தாழிசைகளில் வெகுளிச் சுவை பீறிட்டுக் கொண்டு வரு வதைக் கண்டு மகிழலாம். உவகைச் சுவை : சுவை நூலார் உவகையை முதல் சுவை பாகக் குறிப்பிட்டுள்ளனர். ‘காதல் இல்லாமல் கதை உண்டா ?” என்ற ஒரு வி ைநம்மிடையே உலவுகின்றதல்லவா ? இதற்கு மூலகாரணம் நம் தமிழ் இலக்கியங்களில் எதுவும் உவகையைத் தழுவி இருப்பதுவேயாகும். தமிழ் இலக்கியங்களில் இச்சுவை ஓர் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. காதலேயே ஒரு கலை புே:ல் வளர்த்துள்ளனர் தமிழர்கள். இலக்கியங்களில் வரும் காதற் சுவையை அநுபவிக்க உள்ளத் துய்மையும் வேண்டும் ; சுவைக்கும் பழக்கமும் வேண்டும். கற்பனையுலகில் காணும் இன்பக் கனவுகளாகின்ற வருணனைகளை யதார்த்த உலக திகழ்ச்சிகளுடன் ஒப்பிட்டு நம் இலக்கியங்களைக் குறை கூறுகின் றனர் சிலர். உவகைச் சுவையைத் தமிழ் இலக்கண நூலார் அகத்திகண இயலில் கூறியுள்ளனர். காதல் நிகழ்ச்சிகள் யாவற்றையும் களவு, கற்பு என்ற பிரிவுகளில் அடக்கிக் காட்டுவர் அவர்கள். இவ்விரண்டு பிரிவுகளிலும் உள்ள செய்திகளேயே வடமொழி வாணர்கள் விப்ரலம்ப சிருங்காரம்’, ‘சம்போக சிருங் காரம் என்று வேறு ஒரு முறையில் இரண்டு பிரிவுகளாகப் பாகு பாடு செய்து விளக்குவர். முன்னது பிரிவைப்பற்றிக் கூறுவது ; பின்னது புணர்ச்சியைப்பற்றி உரைப்பது. தொல்காப்பியர் கூறியுள்ளவை யாவும் இவ்வுவகைச் சுவையின் தொடர்புடையன என்று அவர் கூருவிடினும், அவர் அமைத்த முறைகளும் செய்திகளும் இதனுள் அடங்குவனவாயின. பேரரைப்பற்றிய நூலாகிய கலிங்கத்துப் பரணியிலும் உவகைச் சுவை இடம் பெற்றிருப்பதிலிருந்தே அச்சுவையின் பெரு மையை அறியலாம். கடைத்திறப்பில் இச்சுவை பல்வேறு கோணங்களில் சித்திரிக்கப்பெற்றிருப்பதை இரண்டாம் பொழி வில் விளக்கினேன். ஈண்டும் ஒன்றிரண்டு காட்டுகின்றேன். போரில் புண்பட்ட வீரர்கட்கு வீட்டில் மருத்துவ சிகிச்சை தரப்பெறுகின்றது. அப்புண்களுக்கு அவ் வீரர்களின் துணைவியரே சிகிச்சை தருகின்றனர். இதனக் கவிஞர், " தங்குகண் வேல்செய்த புண்களைத் தடமுலை வேதுகொண்டு ஒற்றியும் செங்கனி வாய்மருந்து ஊட்டுவீர் ! செம்பொன் நெடுங்கடை திறமிளுே.’55 55. தாழிசை-55.