பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணி காட்டும் சுவைகள் i 4? மீட்டும் எமையடிமை-செய்தாய் மேலும் பொறுத் திருத்தோம் துருபதன் மகளே-திட்டத் துய்நன் உடன் பிறப்பை, இருபகடை என்ருய் -ஐயோ! இவர்க் கடிமை என்ருய் ! 'இதுபொறுப்ப தில்லை’-தம்பி! எரிதழல் கொண்டுவா கதிரை வைத் திழந்தான்-அண்ணன் கையை எரித்திடு வோம்.' என்று பாரதி காட்டும் சொல்லோவியத்தில் வெகுளிச் சுவை யைக் கண்டு மகிழலாம். தான் திறை கொடாத செயலக் காரணமாகக் கொண்டு குலோத்துங்கன் தன் நாட்டின்மீது படையை ஏவியுள்கrசன் என்பதைக் கேள்வியுறும் அனந்தபன்மன் சினங் கொள்ளுகின் ருன். வெந்தறுகண் வெகுளியிஞல் வெய்துயிர்த்துக் கை புடைத்து வியர்த்து நோக்கி' இவ்வாறு பேசுகின்ருன் :

  • வண்டினுக்கும் திசையானே மதங்கொடுக்கும்

மலர்க்கவிகை அபயற் கன்றித் தண்டினுக்கும் எளியகுே எனவெகுண்டு தடம்புயங்கள் குலுங்க நக்கே..”* (கவிகை - வெண்கொற்றக் கொடை , தண்டு - சேனை : வெகுண்டு . கோபித்து , நக்கு - சிரித்து | " கானரனும் மலேயரனும் கடலரணும் சூழ்கிடந்த கலிங்கர் பூமி தானரணம் உடைத்தென்று கருதாது வருவதுமத் தண்டு போலும்." (கான் - காடு ; அாணம் பாதுகாப்பு) 51. பாரதி : பாஞ்சாலி சபதம்-279 281. 52. தாழிசை-375, 53. தாழிசை 376, 54. தாழிசை-377.