பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மும்மணிகள் ஆரும் பொழிவு தமிழன்பர்களே ! தாய்மார்களே ! வணக்கம். இன்று நடைபெறுவது கலிங்கத்துப் பரணி பற்றிய ஆரும் சொற்பொழிவு. இதுவே இத் தொடரில் நடை பெறும் இறுதிச் சொற்பொழிவுமாகும். இதுகாறும் நடைபெற்ற ஐந்து பொழிவுகளிலும் சயங்கொண்டார் படைத்த அருத்தமிழ்ச் சொல்லோவியத்தை, கலைச் செல்வத்தை, பல்வேறு கோணங் களில் நின்று கண்டு மகிழ்ந்தோம். இன்று பாட்டுடைத் தலைவ குகிய முதற் குலோத்துங்கன், அவன் தளபதியாகிய கருணு கரத் தொண்டைமான், இந்த அருந்தமிழ் நூலே, ஒப்பற்ற கலைச் செல்வத்தைப் படைத்தளித்த கவிஞர் பெருமான் சயங் கொண்டார் ஆகிய மூவர்களைப்பற்றியும் உள்ள சில செய்திகளே யும் உங்கட்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். அரசர் மணியை யும் தளபதி மணியையும் காட்டிய ஒளியில் கவிஞர் மணியின் ஒளியும் நன்கு ஒளிர்ந்ததைக் கடந்த ஐந்து பொழிவுகளிலும் கண்டோம் ; மூன்று மணிகளின் ஒளியிலும் உலவி மகிழ்ந்தோம். அந்த மூன்று மணிகளையும்பற்றிய செய்திகளைக் கூறும் இப் பொழிவு மும்மணிகள்” என்று தலைப்பிட்டது பொருத்தமே யன் ருே ? முதலாவதாகப் பாட்டுடைத் தலைவகுண குலோத் துங்கனைப்பற்றிய குறிப்புக்களேக் காட்ட விரும்புகின்றேன். இவன் புகழ் பாடும் நூலாதலால் இவனேப்பற்றி முதலில் அறிந்து கொள்வோம். 1. குலோத்துங்கன் குலோத்துங்கன் சளுக்கியர் மரபில் தோன்றிச் சோழர் குலத்தை விளங்க வைத்துப் பெரு வீரய்ைத் திகழ்ந்த பேரரச வைான். இவன் தந்தை சளுக்கிய குலத்து இராசராசன் ;