பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼5岛 பரணிப் பொழிவுகள் தாய் கங்கைகொண்ட சோழனின் மகளாகிய அம்மங்கை தேவி. இராசராசனும் கங்கை கொண்டானின் உடன் பிறந்தாள் மகனே யாவான். மக்கள் தாயம் பெற்றுள்ள நாடுகளில் வாழும் ஆண் மக்கள் யாவரும் தம் தந்தையின் மரபையே தமது மரபாகக் கூறிக் கொள்வது வழிவழி நிகழ்ந்துவரும் வழக்கமாகும். அம்முறைப்படி, குலோத்துங்கன் கீழைச்சளுக்கிய மரபினன் ஆவான். ஆணுல், இவன் சோழ மண்டலத்தில் தன் தாய்ப்பாட்டன் அரண்மனை யில் பிறந்து இளமைப் பருவத்தில் அங்கு வளர்ந்து வந்தமை யாலும், தமிழ்மொழியையே தாய் மொழியாகக் கொண்டு பயின்று தமிழ் மக்களின் வழக்க ஒழுக்கங்களே மேற்கொண்டமையாலும் இவன் தன்னைச் சோழ அரசகுமரனுகவே கருதிக் கொண்டான். அதற்கேற்ப, சோழ நாட்டிற்குப் பேரரசனுகும் பேற்றை எதிர் காலத்தில் எய்தி அதனை ஐம்பதாண்டுகள் நல்லாட்சி புரியும் நல்லு:ாழும் பெற்றிருந்தான். சோழர்களும் சளுக்கியர்களும் மூன்று தலை முறையாக மகட் கொடை முறையில் குருதியுறவு கொண்டிருந்தனர். சோழர் சளுக்கியர் உறவினை அடியிற் குறிப்பிட்ட மரபுவழிப் படத்தால் தெளிவாக அறியலாம். (சோழர்) (கீழைச் சளுக்கியர்) இராசராசன்-1 i |

  • இராசேந்திரன்-1 குந்தவை x விமலாதித்தன்

|- AASAASAASAASAASAASAASAASAASAAAS i Ꭽ Y விசயராசேந்திரன் அம்மங்கை X இராசராச நரேந்திரன் N. Y மதுராந்தகி x குலோத்துங்கன்.I இந்த உறவு முதன் முதலில் எவ்வாறு தொடங்கியது என்பதை ஈண்டு விளக்குவேன். I. S. 1, Vol I No 39, A grant of Vira-chola Verses 6-8,