பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மும்மணிகள் 153 முதலாம் இராசராசன் காலத்தில்தான் (கி. பி. 985-1014) பிற்காலச் சோழர்களின் புகழ் பல்வகையானும் சிறப்புற்ருேங்கி யது. நாட்டின் பரப்பும் நாற்புறத்திலும் விரிந்தது. இராசராசன் கி. பி. 972 முதல் 985-இல் அரசுக் கட்டில் ஏறினன். கி. பி. 972 முதல் 989 வரை கீழைச்சளுக்கியரது ஆட்சிக்குட்பட்டிருந்த வேங்கி நாடு உள்நாட்டுக் கலகங்களால் அல்லலுற்றிருந்தது. வேங்கி நாட்டின் குழப்பநிலையைப் பயன்படுத்திக் கொண்டு முதலாம் இராசராசன் தன் மகன் இராசேந்திரனே ஒரு பெரும் படையுடன் வேங்கி நாட்டிற்கு அனுப்பினன். இராசேந்திரன் அந்நாட்டை வென்று அதனைத் தனக்கு உரிமையாக்கிக்கொண்ட துடன் அந்நாட்டு வேந்தனுகிய விமலாதித்தனையும் சிறைப் பிடித்துக் கொண்டு தஞ்சைக்குத் திரும்பினன். விமலாதித்தனும் தஞ்சையில் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தான். இந்நிலையில் இராசராசனுக்கு ஒரு தாள் ஒரு நல்லெண்ணம் உதித்தது. அதனைத் தன் நாட்டு நலத்திற்குப் பயன் படுத்திக் கொண்டான். இராசராசன் விமலாதித்த&னச் சிறை நீக்கித் தன் மகள் குந்தவையை அவனுக்கு மணமியற்றித் தந்தான், அவன் நாட்டையும் அவனுக்கு வழங்கி அதனை ஆட்சி புரியும் உரிமையையும் அளித்தான். இதனுல் சளுக்கிய நாட்டு மக்களின் அன்பைப் பெற்ருன், விமலாதித்தன் கி. பி. 1015 முதல் 1022 வரை ஆட்சி செலுத்தின்ை. விமலாதித்தனுக்கு இராசராச நரேந்திரன், விசயாதித்தன் என்ற இரு மக்கள் பிறந்தனர். விமலாதிந்தன் இறந்த பிறகு இராசராச நரேந்திரன் மணிமுடி கவிக்கப்பெற்று நாட்டை ஆளத் தொடங்கின்ை. அந்தக் காலத்தில் சோழ நாட்டின் அரசனுக முதலாம் இராசேந்திரன் (கி. பி. 1012-1044) என்பான் ஆண்டு வந்தான் ; தன் வட நாட்டு வெற்றிக்குப் பிறகு இவன் தஞ்சையை விட்டுத் திருச்சி மாவட்டம்-உடையார் பாளையம் வட்டத்தில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற தலைநகரை ஏற்படுத்தி அதிலிருந்துகொண்டு ஆட்சி புரிந்து வந்தான். தந்தை வழியைப் பின்பற்றித் தன் மகள் அம்மங்கையைத் தன் உடன் பிறந்தாள் மகனுன இராச ராச நரேந்திரனுக்குக் கடிமணம் இயற்றித் தந்தான். மணமக்கள் இருவரும் வேங்கி நாட்டில் வாழ்ந்து வந்தனர். 2. வேங்கி நாடு என்பது, கிருஷ்ண கோதாவரி என்ற இரு பேராறுகளுக்கும் இடையில் கீழ்க்கடலைச் சார்ந்துள்ள ஒரு நாடு. அந்த நாட்டை ஆண்டு வந்தவர்கள் கீழைச் சளுக்கியர்கள்,