பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 80 பரணிப் பொழிவுகள் ஆறு நாட்கள் உங்களுடன் கலந்து அளவளாவவும், கலிங்கத் துப் பரணி என்னும் நூலே மீண்டும் ஒருமுறை ஆழ்ந்து கற்கவும், கற்றவற்றை ஒருமுறை உங்களிடம் கோவைப்படுத்திப் பேசவும் வாய்ப்பளித்த திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தாருக்கும், கரும்பு தின்னக் கூலி கொடுத்துவரும் எங்கள் குலத் தோன்றல் கனாகியகே பல்கலைக்கழக மானியக் குழுவிற்கும் (University Grants Commission) என் நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். நாம் எல்லோரும் ஒருங்கு கூடி தமிழுடன் உறவாடுவதற்குக் காலமும் இடமும் களனும் அமைத் துக்கொடுத்த பாக்காலா தமிழ் மன்றத்தினருக்கு உங்கள் சார்பாகவும், எங்கள் பல்கலைக்கழகத்தின் சார்பாகவும், என் சார்பாகவும் என் நன்றியை மீண்டும் மீண்டும் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். எங்கெங்கிருந்தெல்லாம் வரும் பக்தர்கட்கு மடைதிறந்து கருணை வெள்ளம் பாய்ச்சும் எம்பெருமான் ஏழுமலையான், பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண் டல்' , ஒன்றுக்கும் பற்ருத என்னேயும் ஒரு பொருளாகக் கொண்டு இத்தமிழ்ப் பணியினைத் தமிழ் நாட்டெல்லேயிலிருந்து கொண்டு புரிமாறு பணித்து, எனக்கு எல்லா நலன்களேயும் ஈத்து, உடல்நலத்துடனும் மனவளத்துடனும் இருந்துகொண்டு தொடர்த்து தமிழ்ப் பணியின நடத்தி வருமாறு திருவருள் புரிகின்ருன் என்பதை நான் உணர்கின்றேன் ; நீங்களும் அதனே அறிவீர்கள். குன்றம்ஏந்திக் குளிர்மழை காத்த அந்த எம்பெருமானே நினைந்து, " அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா ! நிகரில் புகழாய் ! உலகமூன்று உடையாய் என்னே ஆழ்வானே ! நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே ! புகலொன்(று) இல்லா அடியேன்உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.” என்ற நம்மாழ்வார் பாசுரத்தைப் பாடி அமைகின்றேன். வணக்கம். 84. குறள்-399; (பரிமே. உரை) ; சிவப்பிரகாசர் : வெங்கை யுலா கண்ணி-60, 85. குமரகுருபரர் : மீனுட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்ப்காப்பு-1. - 86. திருவாய்மொழி 3, 3 : 8. 87. திருவாய்மொழி 6. 10:10,