பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மும்மணிகள் # 79

  • கலிங்கரோடத் தென்றமிழ்

தெய்வப்பரணி கொண்டு: என்று ஒட்டக் கூத்தர் இந்நூலைச் சிறப்பித்தமையை அறியலாம். பிற்காலப் புலவராகிய பலட்டடைச் சொக்கநாதப் புலவர் என்பார், ' வெண்பாவிற் புகழேந்தி, பரணிக்கோர் சயங்கொண்டான் ; விருத்தமென்னும் ஒண்பாவில் உயர்கம்பன் ; கோவை.உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன் ; கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள் ; வசைபாடக் காளமேகம்; பண்பாய பகர்சந்தம் படிக்காச லாலொருவர் பகரொணுதே' என்று சிறப்பித்துள்ளமை ஈண்டு அறியத்தக்கது. யார் யார் எந்தெந்த வகை இலக்கியங்களே இயற்றுவதில் வல்லவர் என்று திறனுய் கவிதை” இது. பன்முறை படித்துத் தமிழ் இலக்கியக் களஞ்சியத்தை முன்னும் பின்னும் பன்முறை நோக்கித் திறனுய்ந்த புலவரின் திறனே எண்ணி எண்ணி மகிழ்கின்ருேம். வேருெரு நூல் : இப்புலவர் பெருமான் கலிங்கத்துப் பரணி" என்ற இந்தச் செல்வத்தைத் தவிர புகார் நகரத்து வணிகரைச் சிறப்பித்து இசையாயிரம்’ என்ற மற்ருெரு நூலப் பாடியதாகத் தமிழ் நாவலர் சரிதை'யால் அறிகின்ருேம். அந்நூலில், 'செட்டிகள் மேல் இசையாயிரம் பாடியபோது செக்கார் புகார் தங்கட்கு ஊர்” என்று பாடச் சொல்லச் சயங்கொண்டார் பாடியது” என்ற தலைக்குறிப்புடன் காணப்பெறும்,

ஆடுவதும் செக்கே அளப்பதும் எண்ணெயே கூடுவதும் சக்கிலியக் கோதையே-நீடுபுகழ்க் கச்சிசெப் பேட்டிற் கணிக்குங்காற் செக்கார்தாம் உச்சிக்குப் பின்புகார் ஊர்.”* என்ற வெண்பாவால் இதனே அறியலாம்.

எனவே, அன்பர்களே, இதுகாறும் நாம் மும்மணிகளின் முத்திறப் பெருமையினக் கண்டு மகிழ்ந்தோம். இங்ஙனம் 31. தக்கயாகப் பரணி - தாழிசை 776. 82. தனிப்பாடல். 83. தமிழ் நாவலர் சரிதை-119.