பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 பரணிப் பொழிவுகள் திறப்பு என்ற பகுதியிலுள்ள சயங்கொண்டாரின் பாடல்கள் அனைத்துமே அகத்துறைபற்றியவை; காதல் சுவை விஞ்சி நிற் கும் அற்புதச் சொல்லோவியங்கள். இப்பகுதியில் மகளிர் பண் புகளே பன்னிப் பன்னிச் சொல்லப்பெறுகின்றன. கலிங்கப் போரை அடிப்படையாகக் கொண்ட பரணி நூலில் - புறத்துறை பற்றிய நூலில்-அகப்பொருளையும் அழகுற எடுத்துக்காட்டும் கவிஞர் பெருமானின் ஆற்றல் விழுமியது; திட்பமுடையது; ஆழ தேசக்கும் தன்மை வாய்ந்தது. முதலாவதாக : உறுப்பு நலன்களைச் சித்திரிக்கும் ஒரு சில காட்சிகனேக் காண்போம். எடுத்த எடுப்பில் சூதாடு கருவியின் அனவாகிய கொங்கைகளையும், உடுக்கையின் அளவாகிய இடுப் பினேயும், காதை அளாவும் கண்களேயும் உடைய பெண்கள் கடை திறக்குமாறு வேண்டப்படுகின்றனர். அடுத்து,

  • புடைபட இளமுகில வளர்தொறும்

பொறையறி வுடையரும் நிலைதளர்ந்(து) இடைபடுவதுபட அருளுவீர் இடுகத(வு) உயர்கடை திறமினே.”* (புடைபட-பக்கம் திரண்டு இடை-இடுப்பு: இடைபடுவது. துவள்வது, துன் துவது, பட பொருந்த இடுகதவு தாளிடப் பட்ட கதவு; கடைவாயில்) என்று மகளிர் காட்டப்பெறுகின்றனர். இளமுலைகளே யோகி பரின் நிலையைக் குலைக்குமெனில், முதிர்ந்த முலைகளின் செயஆ மொழியவியலாதென்று காட்டுகின்றர் கவிஞர்; யோகியரே திலகுலைவாரெனின், ஏனைய ஆடவரின் செயலை இயம்ப வேண்டு வதில்லை என்பதை ஊகிக்க வைக்கும் கவிஞரின் திறம் போற்றத் தக்கது. இன்ளுெரு பாடலில் மகளிரை விளிக்கும்போது கொங்கை களின் வனப்பு உருவக அணி தோன்றக் காட்டப்பெறுகின்றது. இதோ அப்பாடல் : " உந்திக் சுழியின் முளைத்தெழுந்த உரோமப் பசுந்தாள் ஒன்றில் இரண்டு) அந்திக் கமலம் கொடுவருவீர் அம்பொற் கபாடம் திறமினே.” (உந்திச்சுழி-கொப்பூழ், உரோமம்-மயிரொழுங்கு தாள். தண்டு; அந்திக் கமலம்-மாஆலயில் காணப்பெறும் தாமரை மொட்டு கொடு-கொண்டு (இடைக்குறை, 25. தாழிசை-21. 26, தாழிசை-22, 27, தாழிசை-39,