பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடை திறப்பு 37 உயர்ந்த உள்ளங்களின் உணர்ச்சிகளே நாம் உணர்வதற்குக் கலை பயன்படுவது ஒரு புறம் இருக்கட்டும். தம் உள்ளத்திலும் ஆழ்ந்த உணர்ச்சிகள் வெளிப்பட வழியின்றி மிகவும் அட்ங்கிக் கிடக்கின்றன. அந்த ஆழ்ந்த உணர்ச்சிகள் நம் வாழ்வின் அடிப்படையாக அமைந்திருந்தும் நாம் அவற்றை நன்கு உண ராமலேயே கிடக்கின்ருேம். புலன்களால் உணரத்தக்க உலகி னின்று தப்பித்துக் கொள்வதும், நம்மிடமிருந்து நாம் தப்பித்து கொள்வதுமே வாழ்க்கையாக அமைந்துள்ளன. இந்நிலையினின்று விழிப்புற்று, வாழ்க்கையை நன்கு உணரவும், நம் உள்ளத்து ஆழ்ந்த உணர்ச்சிகளே நன்கு புரிந்து கொள்ளவும் கலைஞரின் உணர்ச்சிப் படைப்பு நமக்குத் துணைநிற்கின்றது. * இக் கருத்துக்களே நினேவிலிருத்திக்கொண்டு さはJリ கொண்டார் காட்டும் காட்சிகளைக் காண்போம். காதல்பற்றிய அகச்செய்திகள் அகம்' என்று குறிப்பிடப்பெறும் என்பதை நாம் நன்கு அறிவோம். ஒருவனும் ஒருத்தியும் தம்முள்ளே காதல்கொண்டு மணம்புசித்து இல்வாழ்வு நடத்துகின்ற செய்தி களைப் பலபடியாக வகுத்துக் கூறுவதே அகப் பகுதியாகும். ‘காதல்’ என்பது கேவலம் விலங்கு உணர்ச்சியன்று. காதலுக்கு எல்லேயே இல்லை. அ.து ஒரு நெறியில் நின்ருலும் எல்லையற்றுப் பரந்து பெருகித் தோன்றும்.

  • நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே ; சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடளுெடு நட்பே. ' .' (உயர்ந்தன்று-உயர்ந்தது; ஆரளவு-அருமையளவு, அளத் தற்கரிய ஆழம்; இழைக்கும்-செய்யும்) - என்ற குறுந்தொகைப் பாடல் காதல் பூமியைக் காட்டிலும் பெரி தென்றும், வாஜனக் காட்டிலும் உயர்ந்தது என்றும், கடலைக் காட்டிலும் ஆழமுடையது என்றும் கூறுவது காண்க. கடை 23. “It may make us from time to time a little more aware of the deeper, unnamed feelings which form the substratum of our being, to which we rarely panetrate; for our lives are mostly a constant evasion of ourselves, and an evasion of the visible and sensible world”. Eliot, T. S. The Use of Poetry and the Use of Criticism p. 155. 24. குறுந்தொகை-3.