பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பரணிப் பொழிவுகள் முன்னூல்களால் அறிந்து தெளியத்தக்கது என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன். அங்ங்ணம் பாடுவது வேந்தனது வெற்றித் திறங்களாக இருப்பின், அவற்றுள் களவழி முதலிய புறத் துறைகள் பலவும் பயின்று வருதல் இயல்பேயன்ருே ? அதனல் செருக்களத்தின் இயல்புகளைக் கவிஞர்கள் மகளிர் கூற்ருக அமைத்துக் கூறிச் சிறப்பித்ததகுல் எவ்வித குற்றமும் இல்லை என்பது ஈண்டு அறியத்தக்கது. எனவே, முன்னேர் மொழி பொருளைப் பொன்னேபோல் போற்றும் புலவர் பெருமான் சயங் கொண்டாரும் செருக்களத்தியல்புகளே மகளிரின் கூற்றில் வைத்துச் சிறப்பித்துள்ளார் என்பது ஈண்டு உளங்கொள்ளத் தக்கது. - - - சில சுவையான காட்சிகள் : இனி, கடை திறப்பில் சித்திரிக் கப்பெறும் சில சுவையான காட்சிகளைக் காட்ட விரும்புகின்றேன். உண்மையும் அழகும் திறைந்த சொற்களால் வாழ்க்கையைப் புலப்படுத்துவதே இலக்கியம் என்பர் திறய்ைவாளர்கள். உயிரின் (ஆன்மாவின்) உண்மை வரலாருக இருப்பதுவே இலக்கியம் என்பர் மெய்ப்பொருளியலார். கலையழகும், குறிப்பாற்றலும், தலபெற்றப் பண்புகளும் இலக்கியத்தின் சிறப்பியல்புக ளாகும். ஓர் இலக்கியம் வெவ்வேறு மனநிலைகட்கு ஏற்ப வெல்வேறு உணர்ச்சிகளே எழுப்பு வல்லது. அதே இலக்கியம் ஒருவர்க்கு இளமையில் ஒருவகை உணர்ச்சியையும், வளர்ந்த இறகு அவருக்கே மற்குெரு வகை உணர்ச்சியையும், தொடித் தண்டூன்றி த.க்கும் முதுமைப் பருவத்தில் வேருெரு வகை உணர்ச்சியையும் அளிக்கவல்லது. உணர்ச்சி வடிவமான மனம் என்றும் ஒரே நிலையில் இருக்க முடியாததே இதற்குக் காரணம் ஆகும். ஆகவே, இலக்கிய அதுபவம் பலர்க்குப் பல வகை பாகவும், ஒருவர்க்கே பருவத்திற்கேற்பச் சில வகையாகவும் இதுைபடுகின்றது. இத்தகைய வேறுபாட்டினே விளைவிக்க வல்ல தனிப் பண்பும் ஒர் இலக்கியத்தின் நெடுங்காலக் கவர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைகின்றது. べ × 、 . . . இந்த உலகில், கல உலகில், பண்பட்ட உணர்ச்சியை புடைய கலைஞர் மிகச் சிலரே. அந்த ஒரு சிலரின் உணர்ச்சி யதுபவம் நன்கு புலப்படுவதற்குக் கலகாரணமாக அமைகின்றது. அந்த ஒரு சிலரின் அநுபவத்திற்கும் கலை கருவியாக உள்ளது. அத்தகைய கல இல்லையாயின் உயர்ந்த உள்ளத்தின் நிஜலயைப் பலர் பெற முடியாமல் போயிருக்கும்; சிலருடைய உயர்ந்த அது பவங்களும் பயன் அற்றுக் கழித்திருக்கும். ?? இங்கனம், மற்ற p. 2 嶽 Richards, I. A. : Principles of Literary Criticism