பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடை திறப்பு 35 பூதத்திற்குப் பூவும் பொங்கலும் சொரிந்து குரவையாடி அரசனே வாழ்த்து வதை,

  • காவற் பூதத்துக் கடைகெழு பீடிகைப்

புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து துணங்கையர் குரவையர் அணங்கெழுந் தாடிப் பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி ' " (நோலே-எள்ளுருண்டை ; விழுக்குடை மடை-நிணத்துடன் கூடின சோறு; அணங்கு-தெய்வம் ; வசி-மழை) என்ற இந்திர விழாவூரெடுத்த காதைப் பகுதியால் அறியலாம். அன்றியும், செங்குட்டுவனது வடநாட்டு வெற்றியை அறிந்த ஆயச் செவிலியர் அதிகாலையில் அரண்மனைக்குச் சென்று துயி லெழுப்பி யுணர்த்திப் பாட்டொடு தொடுத்து வாழ்த்தியதை, ' வெயிலிளஞ் செல்வன் விரிகதிர் பரப்பிக் குணதிசைக் குன்றத் துயர்மிசைத் தோன்றக் ه . و و و دا د بي * * « ماسة به هي هبه وعة 4 * * «ه துணையணைப் பள்ளித் துயிலாற்றுப் படுத்தாங்கு எறிந்துகளங் கொண்ட இயறேர்க் கொற்றம் அறிந்துரை பயின்ற ஆயச் செவிலியர் தோட்டுணே துறந்த துயரீங் கொழிகெனப் பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்த (வெயிலிளஞ் செல்வன்-பகலவன்; குணதிசை-கிழக்குத் திசை துணையணே தாங்(கு)-துயிலைப்போக்கி; தோள்துணை-கண வனது தோளின் துணை) என்று இளங்கோவடிகள் நீர்ப்படைக் காதை"யில் குறிப்பிடு வதனுலும் அறியலாம். இங்ங்னம், விழாக் காலங்களில் துணங்கை, குரவை முதலிய கூத்துக்களையும், அம்மானே பந்து ஊசல் முதலிய ஆட்டங்களேயும், தம் அரசனது போர் வெற்றிகளைப் புனைந்து புகழ்ந்து பாடிக் கொண்டே நிகழ்த்துவது மகளிர் வழக்கு என்ப தைக் குறுந்தொகை, மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் முதலிய 20. சிலப். 5 : 67-73. 21. சிலப் 27 : 195.212.