பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பரணிப் பொழிவுகள் உண்டு என்று முன்னர்க் குறிப்பிட்டது உங்கட்கு நினைவு இருக் கலாம் என்று கருதுகின்றேன். இத்தகைய வெற்றி விழாவில் நாடாளும் அரசனைப் பாட்டுடைத் தலைவனுக்கி அவனுடைய வெற்றித் திறங்களேக் கொண்டாடும் வழக்கமும் அக்காலத்தில் இருந்து வந்தது, பரணியைப் பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பிய உரையாசிரியர்கள் வழிபடுவதோர் வழக்குப் பற்றியது” என்றும், 'வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே" என்றும் கூறுவதனுல் அத்தகைய வழக்கு மக்களிடம் நிலவி வந்த வழக்கே என்பதனே தாம் அறிதல் வேண்டும். மேலும், கூழுந் துணங்கையும் கொடுத்து வழிபடுவதோர் வழக்கு என்று கூறுவதனை எண்ணிப் பார்க்கும் பொழுது அவற்றினேக் கொடுப்போர் மகளிரே யாவர் என்பதசிண பும் அறிதல் வேண்டும். இஃது எங்ங்ணம் என்று நீங்கள் வினவலாம். -

  • Loo; or:# குழிஇய விழவி குனும்

Les siff தழிஇய துணங்கை யானும் 第季盘移 | மின்னர்-வீரர்; குழிஇய-கூடியுள்ள; தழி இய-தழுவி ஆடு தின் த : என்ற ஆதிமத்தியசரின் குறுந்தொகைப் பாடற்பகுதியால் இதன் அறியலாம். திருவிழாக் காலங்களில் வீரர்கள் தத்தம் சேரிகளில் விக்ாயாட்டுப் போர் நிகழ்த்துவதையும், அந்த விழாக் காலத்தில் மகளிர் துணங்கை யாடுதலும், அக்காலத்தில் ஆடவர் அவர்கட்குத் தலேக்கை கொடுத்தலும் பண்டைய மரபாக இருந்து வந்துள்ளது, மதுரைக் காஞ்சியிலும்,

  • இலங்குவளே மடமங்கையர்

துணங்கையஞ்சீர்த் தழுஉமறப்பு " ." இலங்கு விளங்குகின்ற; அம்சீர் தழுஉ அழகினையுடைய தான அறுதியினே புடைய குரவைக் கூத்து.) என்று துணங்கையாடுதல் மகளிர்க்கே உரியதாகக் கூறப்பெற்றி றிருத்தல் காணத்தக்கது. இன்னும் சங்க இலக்கியங்களில் இதற்குப் பல சான்றுகளேக் காணலாம். இத்தகைய கொற்றவை விழா பண்டையில் நடைபெற்று வந்தது என்பதற்குச் சிலப்பதிகாரத்திலும் சான்று உள்ளது. காவிரிப்பூம் பட்டினத்திலுள்ள மறக்குடிப் பெண்டிர் நாளங்காடி 18. குறுந்தொகை-31. 19. மதுரைக் காஞ்சி-வரிகள் 159, 160,