பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடை திறப்பு 33 நாடாளும் வேந்தனின் வெற்றி அந்நாட்டில் வாழும் எல்லோ ருடைய வெற்றியன்ருே ? தக்கயாகப்பரணி, இரணியவதைப் பரணி ஆகிய நூல்களில் வரும் கடை திறப்புப் பகுதிகளில் வாணர மகளிர், நீரர மகளிர், மேரு கயிலைகளில் வாழும் மகளிர் முதலியோர் கடை திறக்குமாறு விளிக்கப்பெற்றிருப்பது கருதத் தக்கது. இந்த இரண்டு நூல்களில் குறிப்பிடப்பெறுவோர் கடவுளர்களாதலின் எல்லா உலகங்களிலுமுள்ள மகளிரும் வெற்றி விழாவில் பங்கு கொள்கின்றனர் என்று ஏற்றபெற்றி அமைத்துக்கொள்வதே பொருத்தமாகும். திருப்பாவைச் செல் வியும் மணிவாசகப் பெருமானும் குறிப்பிடும் பாவை நோன்பில் பங்கு கொள்பவர்கள் மணமாகாத கன்னியரேயாக இருக்க, சயங் கொண்டார் குறிப்பிடும் பரணி விழாவில் பங்கு பெறுவோர் எல்லா வயது நிலை மகளிருமாக இருக்கக் காண்கிருேம், இவ் வேறுபாடு உய்த்துணரத்தக்கது. இன்னும், இரவில் நிகழ்ந்த ஊடல் கூடல் முதலிய செயல்களால் அயர்ந்து துயிலெழாது வைகறையில் உறங்கிக் கிடக்கும் மகளிரை அவர்கள் செயல் களைப் பல படியாகவும் அசதியாடித் துயிலுணர்த்தும் உரிமை, "தாமே, அவரே என்ற வேற்றுமையின்றிப் பழகும் தோழியர்க் கன்றி அங்ஙனம் பழக வாய்ப்பே இராத ஆடவர்கட்கு எவ் வாற்ருலும் இயலாதன்ருே ? இங்ங்னம் மகளிரே எழுப்பிய தாகக் கொள்வதால் யாதொரு குற்றமும் ஏற்படாது போகின்றது. இன்னும் ஒரு குறிப்பினை உங்கள் முன் வைக்கின்றேன். திருப்பாவையிலும் திருவெம்பாவையிலும் உள்ள பாடல்கள் மகளிர் கூற்றென்று வெளிப்படையாகப் புலப்படுவதுபோல் கடை திறப்புப் பகுதியிலுள்ள பாடல்களால் வெளிப்படையாக அறியக் கூடவில்லையே என்று சிலர் ஐயுறுகின்றனர். அங்ங்ணம் வெளிப் படக் கூறியிருப்பின் இவ்வித ஆராய்ச்சிக்கு இடமே இல்லை. எனவே, முன்னேரால் தெளிவாக விளக்கப் பெருத கடை திறப்பின் உட்கருத்தை அப்பகுதியில் கூறப்பெறுவனவற்ருேடும் பண்டிருந்து நிலவி வரும் வழக்குகளோடும் கூட்டி ஏற்ப தொன்றினைக் கொள்ளல் வேண்டும் என்பதற்காகவே இவ்வளவும் கூற வேண்டியதாயிற்று. . வேறு இலக்கியச் சான்றுகள் : இத்தகைய வெற்றி விழாக்கள் கொண்டாடுவது பண்டையோர் மரபாக இருந்து வந்துள்ளது என்பதை உங்கட்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். இதனை வலியுறுத்துவதற்குப் பல்வேறு இலக்கியச் சான்றுகளும் உள்ளன. பரணி நாளில் கொண்டாடப்பெறும் விழாவில் மகளிர் கொற்றவை பொருட்டுக் கூத்தும் பலியும் கொடுத்து வழிபடும் வழக்கம் § .