உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8: பரணிப் பொழிவுகள்

  • மெய்யே கொழுநர் பிழைநலிய

வேட்கை நலிய விடியளவும் பொய்யே யுறங்கும் மடநல்லிf ! பு:னபொற் கபாடம் திறமினுே '." (கொழுதர்-கணவர்; வேட்கை-(கலவி)ஆசை, நலியமனத்தை வாட்ட , . 'போக அமளிக் களிமயக்கில் புலர்ந்த தறிய தேகொழுநர் ஆக அமளி மிசைத்துயில்வீர் அம்பொறி கபாடம் திறமினே '." (போகம்-கலவி யின்பம்: அமளிபடுக்கை, புலர்ந்தது-விடிந் தது. ஆகம்.மார்பு) ' வருவார் கொழுநர் எனத்திறந்தும் வாரார் கொழுநர் என அடைத்தும் திருகும் குடுமி விடியளவும் தேயும் கபாடம் திறமிளுே ”.17 (திருகும்.சுழலும், குடுமி-வாயிலின் மேற்புறத்தமைந்த குழி விடத்தோடு பொருத்தப்பெறும் கதவின் தலைப்பகுதி) என்ற தாழிசைகளில் வரும் ‘விடியளவும்', ' புலர்ந்தறியாதே ” என்ற தொடர்களால் மகளிர் ஒருவரையொருவர் எழுப்புதல் வைகறையிலேயே நடைபெறுவது என்பதனை அறியலாம். முதற் கருத்தினே ஆராயுங்கால் புலவரே மகளிரை எழுப்பினர் என்று கொள்வதால் நேரிடுல் குற்றங்களே எடுத்துக் காட்டினேன். சயங்கொண்டாரின் கடை திறப்புப் பகுதியில் துயிலெழுப்பப் பெறுவதாகக் கூறப்பெறுவோர் பல்வேறு மகளிராவர். உயர்குல மகளிர், (தா. 24, 37), சிறையாகவும் திறையாகவும் பெற்ற மகளிர் தா. 40, 41), வீரர்களின் இல்லக் கிழத்தியர் (தா. 69), ஒதல் முதலியவையற்றிப் பிரிந்தவர்களின் துணவியர் (தா. 51). வேற்று நாட்டு மகளிர் (தா. 43), பொது மகளிர் (தா) 27, 30), முதலிய பல்வேறு மகளிர் ஈண்டுக் காட்டப்பெற்றுள்னனர். 15. தாழிசை, 36. 16. தாழிசை, 37. 17. தாழிசை, 69.