பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடை திறப்பு 8 i அண்ணலையும் பின்பற்றிக் குலோத்துங்கனின் வெற்றியைச் சிறப் பித்துப் பாடுவதற்கு நகரத்துப் பல்வேறு மகளிர் ஒருவரையொருவ சென்று அழைப்பதாக அமைத்துள்ளார் என்று கொள்வதே எல்லாவற்ருனும் ஏற்புடைத்தாகும்.

  • காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த

கலவி மடவீர் ! கழற்சென்னி காஞ்சி இருக்கக் கலிங்கம் குலேந்த களப்போர் பாடத் திறமினுே ”. 8 |காஞ்சி-இடையணி, காஞ்சிபுரம், கலிங்கம்-(உடுத்த ஆடை, கலிங்க நாடு; குலேந்த-நிலை பெயர்ந்து கிடந்த, அழிந்த என்று இருபொருளில் வந்துள்ளமை காண்க) என்றும்,

  • இலங்கை எறிந்த கருணு கரன்தன்

இகல்வெஞ் சிலையின் வலிகேட்பீர் கலிங்கம் எறிந்த கருணு கரன்தன் களப்போர் பாடத் திறமினுே ”..' (இலங்கை எறிந்த கருணுகரன்.இராமன், கலிங்கம் எறிந் தவன்.கருணுகரத் தொண்டைமான்; களப்போர்-கலிங்கக் களப் போர்) - என்றும் கடைதிறப்பின் இறுதியில், கலிங்க வெற்றியைப் பாடு வதற்கென்றே இங்ங்ணம் மகளிர் அழைக்கப்பெறுகின்றனர் என்பதைச் சயங்கொண்டார் குறிப்பிட்டு அப்பகுதியை முடித் திருப்பது இதனே நன்கு வலியுறுத்துகின்றது. மேலும், மார்கழி நோன்பு கொண்டாடும்.மகளிர் வைகறையில் துயிலெழுந்து ஆற்றுக்குச் சென்று குளிர்ந்த நறுநீரில் குளித்து விளையாடிப் பின்னரே தங்கள் நோன்பினைத் தொடங்குவர். திருப் பாவையிலும் திருவெம்பாவையிலும் மகளிர் ஒருவரையொருவர் எழுப்புதல் வைகறையில் நடைபெறுவதாகவே அறிகின்ருேம். இம்மரபுகளைப் பின்பற்றியே சயங் கொண்டாரும் எல்லா மங்கலங்களும் தொடங்குதற்குரிய காலேயே பரணி விழாவின் தொடக்கத்திற்கும் உரியதெனக் கொண்டு தம்முடைய நூலில் 'கடை திறப்பு என்ற பகுதி நாட்காலேயிலேயே நிகழுமாறு அமைத் துள்ளார். இதற்குச் சில அகச் சான்றுகள் காட்டுவேன். AASAASAASAASAASAASAASAASAASAA 13. தாழிசை, 63. 14. தாழிசை 64.