பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பரணிப் பொழிவுகள் சுமையன்ன கொங்கைமட மின் ஞர்கள். ' என்று தம் பாசுரத்தில் அடிகளார் ஆண்டிருப்பது கண்டு களிகொள்ளத் தக்கது. அடுத்து, மாதர்களின் கண்விழியின் இயல்பினைக் கூறி அவர்கள் விளிக்கப்பெறும் பாடல்களில் வரும் காட்சிகளைக் காண்போம். -

  • கடவில் விடமென அமுதென மதனவேள்

கருதி வழிபடு படையொடு கருதுவார் உடலின் உயிரையும் உணர்வையும் நடுவுபோய் உருவு மதர்விழி யுடையவர் திறமினே.” “ (கடல்-பால் கடல் : மதனவேள் - மன்மதன் ; வழிபடு மதன வேள் என இயைக்க, படை - மலர்க்கண ; மதர் - செருக்கு) என்பது பாடல். மன்மதனின் கணகள் ஆடவர் உயிரையும் உணர்வையும் பிளத்தல்போல், அம்மாதர் கண்களும் அவர்தம் கணவர் உயிரையும் உணர்வையும் ஊடுருவிச் செல்லும் என்று கூறுகின் ருர் கவிஞர். அம்மெல்லியலாரின் கண்கள், அவர்க ஆடைய கேள்வர் அவர்களேத் தனக்குங்கால் அவர்கட்கு விடம் போல் துன்பத்தையும், மணக்குங்கால் அமுதம்போல் பேரின்பத் தையும் புயத்தலால் விடமென அமுதென என்று கூறிய நயம் உணர்த்து மகிழத் தக்கது. " நீங்கில் தெறுஉங் குறுகுங்கால் தண்என்னும் தீயாண்டுப் பெற்ருள் இவள். ' (தெரூஉம் சுடும் குறுகுதல் - அணுகுதல் , தி - நெருப்பு) என்னும் திருக்குறளின் கருத்து ஓராற்ருன் இதில் வந்துள்ளமை கண்டு இன்புறத் தக்கது. காதலிமார் அன்பு கனிந்து மொழியும் இனிய சொற்கள் காமவேட்கையை மிகுவித்து இன்பம் பயத்தலால் ஆடவர் அம்மகளிர் மொழியை அமுதம் என்று கூறிப் புகழ்வர். அத்தகைய அன்புக் கணவன்மார் பரத்தையர் பால் விழைந்து செல்லாமல் காக்கும் தன்மையை யுடைய விழி கண்ப் பெற்றுள்ளனர் அம் மகளிர். 29. தாயுமானவர் பாடல் : தேசோமயானந்தம், 10. 30. தாழிசை-48, 31. குறள்-1104,