பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடை திறப்பு 41

  • பண்படு கிளவியை அமுதெனப்

பரவிய கொழுந&ன நெறிசெயக் கண்கொடு கொலைசெய அருளுவீர் கனகநெ டுங்கடை திறமினுே.’ ’’ (பண் - இசை ; கிளவி - சொல் பரவிய - புகழ்ந்த ; கொழு நன் . கணவன் ; கொடு - கொண்டு ; நெறிசெய-வழிப்படுத்த} என்ற பாடலில் தம் மொழியினைப் புகழ்ந்த கணவரை மகளிர் தம் கட்பார்வையால் வாட்டினர் என்ற செய்தி வந்துள்ளமை காண்க. மாதர்கள் தம் கண்கள் தம் கணவன்மார்களிடம் இழைத்த புண்கட்குச் சிகிச்சை செய்யும் காட்சிகள் காட்டப் பெறுகின்றன. புண்கள் ஆறுவதற்கு வாய்வழியாகவும் மருந்துTட்டுகின்றனர் ; புண்ணிற்கும் வேது கொண்டு ஒற்றித் தம் கைகளாலும் கட்டுகின்றனர் (இறுகத் தழுவுகின்றனர்). " தங்குகண் வேல்செய்த புண்களைத் தடமுலே வேதுகொண்டு) ஒற்றியும் செங்கனி வாய்மருந்து ஊட்டுவீர் செம்பொன் நெடுங்கடை திறமிளுே.”* (கண் வேல்-கண்ணுகிய வேல் ; வேது.சூடான ஒற்றடம் தருதல் ; வாய்மருத்து அதர பானம்.1

  • பொருங்கண் வேல்இளைஞர் மார்பின் ஊடுருவு

புண்கள் தீரஇரு கொங்கையின் கருங்கண் வேதுபட ஒற்றி மென்கைகொடு கட்டு மாதர்கடை திறமினே” : (புண்கள்-மனத்தே புகுந்த காமத் தீ ; கண்-முலேக்கண் ; கட்டும்.இறுகத்தழுவும்) என்ற பாடல்களில் இக்காட்சிகள் வந்துள்ளமை காண்க. ' பனி மொழி, வால்எயிறு ஊறிய நீர் ” (குறள்-1121) என்ற வள்ளுவர் வாக்கையும், ஊறு நீர் அமுது ஏய்க்கும் ஏயிற்ருய் ' (கலி-20), என்ற பாலேபாடிய பெருங்கடுங்கோவின் வாக்கையும், முள்ளெ யிற்று அமிழ்தம் ஊறும் செவ்வாய் ” (குறுந், 286) என்ற குறுந்தொகைப் புலவரின் வாக்கையும் நினைந்தே நம் புலவர் பெருமானும் வாய் மருந்து என்று குறிப்பிட்டுள்ளார். 32. தாழிசை-71. 33. தாழிசை-55. 34, தாழிசை-56.