பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4: பரணிப் பொழிவுகள் " தன்ளுேய்க்குத் தானே மருந்து (குறள் 1112) என்ற வாறு, அம்மடத்தையர் தம் கணவர்க்குத் தாம் தந்த காம நோயைத் தாமே போக்கினர் என்பதை இந்த இரு பாடல் கனாலும் பெறவைத்தார் நம் கவிஞர் பெருமான். கவிஞர் பெருமான் மாதர்களின் கண்பிறழ்ச்சியைக் காட்டும் காட்சி சிலேடை தயந்தோன்ற நின்று கற்போர்க்குக் களிபேரு வகை பயத்து நிற்கின்றது. " பூவிரி மதுகரம் நுகரவும் பொருகயல் இருகரை புரளவும் காவிரி எனவரும் மடதலீர் - கனகதெ டுங்கடை திறமினே.”* (காதர் மேல், கரம்-கை; விரிபூமது-மலர்ந்த மலரிலுள்ள கள்; பொருகயல்-போரிடும் கெண்டை மீன் போன்ற கண்கள் இரு கரை,இரண்டு கண் இதழ்கள் காவிரிமேல். விரிபூ-மலர்ந்த மலரிலுள்ள தேன்; மதுகரம் வண்டுகள் ; பொருகயல்-போரிடும் கெண்டை மீன்கள்; இருகரை,இரண்டு கரைகள்) என்பது பாடல். மலர்த்த மலரிலுள்ள கள்ளைத் தங்கள் கைகளால் பருகவும், போர்புரியும் கென்டை மீன்கள் போன்ற கண்கள் இரண்டு கண்ணிதழ்களினிடையில் புரளவும் மாதர்கள் வரு கின்ருச்கள் எனவும், மலர்ந்த மலரிலுள்ள தேனே வண்டுகள் துகரவும், போர்புரியும் கெண்டைமீன்கள் இரண்டு கரைகளில் புரளவும் காவிரிநதி வருகின்றது எனவும் இரு பொருள் காண்பதற்கேற்றுவாறு இப்பாடலில் சிலேடை நயம் அமைந் திருப்பதைக் கண்டு மகிழ்க. . ' செழுநீர்த் தடத்துக் கயல்மிளிர்ந்தால் ஒப்பச் சேயரிக்கண் அழுநீர் துளும்ப அலமரு கின்றன வாழியாரோ.”* |செழுநீர்-மிக்க நீர் தடம்-குளம்: கயல்-மீன் ; சே அரிகண்ட சிவந்த இரேகைகளையுடைய கண்கள் அழு நீர்-புலம்பும் நீர்; துளும்ப.ததும்ப, அலமருகின்றன-தடுமாறுகின்றன) என்ற நம்மாழ்வாரின் திருவிருத்தப் பாசுரக் கருத்தையொட்டி இத்தாழிசை அமைந்திருப்பதாகக் கருதலாம். பராங்குச 35. தாழிசை~59. 36. திருவிருத்தம்-2,