பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடை திறப்பு 48 நாயகிக்கு நாயகனைப் பிரிந்த வருத்தத்திகுல் கண்கள் நீர்ததும்பி நிற்கும் நிலையைக் காட்டுகின்றது. இப் பாசுரப் பகுதி. பெரிய கடல் போல் இருக்கும் ஒரு தடாகத்தில் அதன் பரப்பெல்லாம் விம்மும்படி மிளிர்ந்ததொரு கயல் மீனனது அத் தடாகம் முழுவதும் குழம்பும்படி இடம் வலம் கொள்ளுமாப்போலே இவள் கண் காணப்பெறுகின்றது என்பது இதன் பொருள். இக்கருத்தை யொட்டியே தாழிசையின் கருத்தும் அமைந்திருப்பதைக் கண்டு மகிழ்க, இனி, டிகளின் கூந்தலின் இயல்புபற்றிக் கூறி அவர்கள் விளிக்கப்பெதும் பாடல்களில் வரும் காட்சிகளைக் காண்போம்.

  • இடையின் நிலஅரி(து) இறும்இறும் என எழா எமது புகலிடம் இனிஇலை எனவிழா அடைய மதுகரம் எழுவது விழுவதாம்

அளக வனிதையர் அணிகடை திறமிகுே.”* (இடை-இடுப்பு ; திலே-திலேபெறுதல் ; இறும்.ஒடியும் எழFஎழுந்தும் : புகலிடம்-அடைக்கலம் ; இலை.வேறு இல்லை ; விழா. விழுந்தும்; அடைய..முழுவதும்; அளகம்-கூந்தல் : வனிதையர்மகளிர்) என்பது ஒரு பாடல், மகளிர் தங்கள் கூந்தலில் முடித்த மலரிலுள்ள மதுவினப் பருக வந்த வண்டுகள் கூந்தல் கொங்கை களின் சுமையால் அவர்தம் சிற்றிடை வருந்தா நிற்கும் நிலை கண்டு, அவர்கள் கூந்தலில் உட்கார்ந்தால் அவர்தம் மெல்லிய நுசுப்பு முறிந்து போகும் என்று கருதி அவை மேலே எழுவதும், அவைகட்கு வேறு புகலிடம் இன்மையால் அவைகள் மீண்டும் அக் கூந்தலிலேயே விழுவதுமாக இருத்தனவாம்.

  • நூலொத்த நேரிடை நொய்ம்மைஎண்

துைநுன் தேன் நசையால் சாலத் தகாதுகண் டீர்வண்டு காள்கொண்டை சார்வதுவே.” (நொய்ம்மை-மென்மை ; நசை விருப்பம் ; சால மிகவும்) என்ற மணிவாசகப் பெருமானின் கருத்து இங்குப் பெரிதும் ஒத்திருத்தல் கண்டு இன்புறத் தக்கது ; முன்னேர் மொழிந்த மொழிப் பொருளைப் பொன்னேடோல் போற்றும் பெற்றி பெரிதும் 37. தாழிசை-57. 38. திருக்கோவையாt-45,