பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பரணிப் பொழிவுகள் போற்றத்தக்கது. அன்றியும், மகளிரின் கூந்தலின்மீது வண்டுகள் மொய்த்துக் கொண்டிருந்தமைக்குக் கவிஞர் கூறும் இன்னுெரு கருத்தும் சுவை ததும்பி நிற்பதாகும். தண்மதி புறப்பட்டுத் தன் கதிர்களாகிய வெப்பத்தைக் கலவைச் சந்தனச் சேற்றைப் பூசியுள்ள குடம் போன்ற கொங்கைகளின்மீது சொரியும் என்று கருதி வண்டுகள் பத்தகலயமைக்கின்றனவாம்? . காம நோயால் வருத்துவோர்க்குத் தண்மதி வெம்மையை விளைவிக்கும் என் பதை தளம் அறிவோம். மென்னடை பயிலும் மகளிர் நிலைக்கண்ணுடியின் முன் இன்று தம் அழகிய கூந்தலப் பின்னி மூடிக்கும் காட்சி மைந்தர் கனின் மனத்தைக் கவர்த்து திற்கும் என்பதை இரண்டு பாடல்க கால் வெளிவிடுகின்று கவிஞர். -

  • முருகிற் சிவந்த கழுநீரும்

முதிரா இளைஞர் ஆருயிரும் திருகிச் செருகும் குழல்மடவீர் செம்பொற் கபாடம் திறமிளுே.' {முருகுமணம் ; கழுநீர்.செங்கழுநீர்ப்பூ , திருகி.முறுக்கிப் பறித்து: குழல், கூந்தல்; பொன் அழகு) " செக்கஞ் சிவந்த கழுநீரும் செகத்தில் இளேஞர் ஆருயிரும் ஒக்கச் செருகும் குழல்மடவீர்! உம்பொற் கபாடம் திறமினே.”* (செகம்-உலகம்) காமுகராகிய இளைஞர் மாதர்களின்முகம், மார்பு, கூந்தல் முதலிய உறுப்புக்களேக் கண்டு மனமுருகி நிற்பர் என்ற இயல்பினே நன்கு அறிந்த கவிஞர் பெருமான் அவருயிரைத் திருகிச் செருகும் குழல் என்று இந்த இரண்டு பாடல்களிலும் விதந்து ஒதினர் என்று கருதலாம். இரண்டாவதாக மகளிர் புன்முறுவலின் இயல்பு கூறி விளிக்கப்பெறும் பாடல்களில் வரும் காட்சிகளைக் காட்ட நினைக் கின்றேன். 39. தாழிசை-60, 40. தாழிசை-50. 41. தாழிசை-74,