பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பொழிவு 3. தமிழன்பர்களே தாய்மார்களே ! வணக்கம். இக் கூட்டத் தொடர்கள் திருவேங்கடவன் பல்கலைக்கழகம், பாக்கால தமிழ்ச் சங்கம் இவர்களின் ஆதரவில் நடைபெறுகின்றன. சொற்பொழிவுகள் தொடர்ந்து நடைபெற § இசைவு தந்த பல்கலைக் கழகத்தினருக்கும், கூட்டங்கள் நடை பெற இடவசதி முதலியவை அமைத்துத் தந்த இத் தமிழ்ச் சங்கத்தினருக்கும் என் நன்றி கலந்த வணக்கத்தை முதற்கண் தரிவித்துக் கொள்ளுகின்றேன். இங்ங்ணம் இரு கழகங்களின் ஆதரவில் நடைபெதும் இக் கூட்டத் தொடர்களில் தண்டமிழ் மொழிக்குக் கருத்துக் கருவூலமாகவும் தமிழன்னைக்கு அணிகல ஞகவும் திகழும் கலிங்கத்துப் பரணி என்ற துல்பற்றி ஆறு சொற்பொழிவுகள் நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளேன். இன்று முதற் சொற்பொழிவு நடைபெறுகின்றது. நூல் அறிமுகம் : இன்று 'கலிங்கத்துப் பரணி என்ற நூலே உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் தோக்கத்தில் வந்துள் ளேன், சாதாரணமாக சமூகத்தில் புதிதாகச் சந்திக்க நேரும் அன்பர்களே அறிமுகம் செய்து வைக்கின்றனர் அல்லவா ? அத் தகைய ஒர் அறிமுகமே இது, அன்பர் யார் ? அவர் எங்கிருந்து வருகின் ருர் ? அவருடைய தகுதி என்ன ? சமூகத்தில் அவரு டைய நிலை என்ன ? என்பன போன்ற சில பொதுச் செய்திகளை மேம் போக்காகக் கூறியே அந்த அன்பர் அறிமுகம் செய்து வைக்கப் பெறுகின்ருர். அதன் பிறகுதான் அவருடைய இயல் புகள், உயர்குணங்கள், நற்பண்புகள், பண்பாடுகள் முதலிய வற்றை நாம் விரிவாக அறிகின்ருேம், அத்தகைய ஒரு முறையில் இன்று மேம்போக்காக - ஒரு வெள்ளோட்டம் போல் - துலேட் பற்றி அறிமுகம் செய்ய எண்ணுகிறேன்.