90
'காரியம் தனில்கண் வைப்போர்,
கயத்துநீர்த் தவளை யொப்பச்
சேரியின் செவியைக் கத்திச்
செவிடாக்க மாட்டா' ரென்றே.
ஆரியம் கூறும்! சுத்த
அசடுநீ! அறியாய் போலும்!
வீரிய முள்ளோர் வேண்டார்
விளம்பர" மென்ற தாம்,புல்.
'நயமற்றுப் பேசும் பேச்சு
நலமற்ற' தாமென் றெண்ணிச்
சுயமற்றுச் சொரனை யற்றுச்
சோகமுற் றிருக்க வேஆல்,
பயமற்ற அறுகும், பண்புப்
பரிவற்றுப் படிப்பற் றார்மேல்
செயமுற்ற விதம்,செப் பிற்றாம்
"செல்லவா? இனிநா" னென்றே.
'அசைதப்பிச் சீரும் தப்பி
அகங்கவ ரோசை தப்பி,
நசைதப்பப் பாடும் பட்டால்
நலந்தரும் பொருளும் தப்பித்
திசைதப்பக் கற்பிக் கின்ற
தேசத்துக் கென்றும் தீரா
வசைதப்ப மாட்டா' தென்னும்
வகையினில் வருந்திற் றன்றால்!
"எள்ளினும் சரியின் றென்னை;
'இயல்புக்கு மாறெ'ன் றெண்ணித்
தள்ளினும் சரியென் சொல்!நீ
தயவுசெய் தெனக்கி ரங்கி,
உள்ளினு முயர்வ ளிக்கும்
உபதேச மதுமட் டும்தான், -
'கொள்' ளென நாளைக் கேனும்
கூறுவா' யென்ற தன்றால் !