பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92


25. ஆலின் ஐயம்

யாருமாய்ந் தறிந்தி டாத
ஆலறு ககங்கா னற்காய்,
நாருமாய் மலரா யொன்றி
நறுமணங் கமழ நாடி
நேரமாய் , நெருந லென்ன
நிறைந்துவந் தமர்ந்தா ளல்லி !
சாரமாய்ப் பார்த்து நானும்
சரிவரச் சாற்ற லானேன் :

புறநெறி யென்றும், போற்றிப்
புலனழுக் ககற்றி யாற்றும்
அறநெறி யென்று மாய்ந்தோ
ரறிவினை யகங்கொள் ளாதே,
மறநெறி மறந்து, மற்றிம்
மண்ணுனும் மனித ராய் நாம்
சிறுநெறி சேர்ந்தோம் , சென்று
சிலைவணக் கம்செய் தற்கே !

எந்திர மயமாய்க் காலம்
இயங்கினு மென் ைமின்னும்
சந்திரன், பருதி , - கோள், நாள்,
சடப்பொரு ளனுக்க ளின்ன, -
அந்தரத் தனைத்து மாய்ந்தே
அறிவுறுத் திடினு மென்ம்ை !
தந்திரத் தரகன் தன் ைகத்
தலையாட்டும் பொம்மை தான்நாம் !

இல்லையே யென்பார், கல்விக்
கிணையெனும் விழிக’ எளிங்கே ;
இல்லையே யெ ன் பார் , வாய் மைக்
கிணை யெனும் தவமு மிங்கே ;
இல்லையே யென்பார், இன்மைக்
கிணையெனும் துன்ப மிங்கே ;
இல்லையே , யென்பார், ஈகைக்
கினையெ னு மின்ப மிங்கே !