பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

96
சமுதாய நெறியைச் சார்ந்து
சரியெனும் முறையில் புல்லும்,
அமுதாய தமிழில் சொன்னால்
அதுதவ றென்கின் றீர்;மோர்த்
துமிதோயப் பாலும் தொக்குத்
துய்ப்புறு தயிராய்த் தோன்றும்,-
நுமதாய நோற்பைப் புல்மேல்
நூக்கினீ ரென்றாள், அல்லி!

அடலிலே வெற்றி யெய்தற்
காற்றலோ டறிவும் தேவை!
குடலிலே குளுமை வேண்டிக்
குடிநீரை தேடிக் கொண்டே
கடலிலே கண்ணை வைத்துக்
கரையிலே நடப்போன், காத்தவ்
வுடலிலே வுயிர்வைத் துக்கொண்
டுலகிலே வுளனா வானொ?

தழைகொண்டு, தளிரும் கொண்டு
தருவது தானாய்ப் பூபிஞ்
சிழைகொண்டு, - பச்சைச் சேலை
யெழிலுடல் கொண்டு, காதிற்
குழைகண்டு பாயும் கெண்டைக்
கூர்விழிக் குமரி போல்-ஆல்
பிழைகண்டு கொள்ளும் முன்போய்ப்
பேசிற்றாம், பெரியோர்ப் போல்புல்:

தனக்காக மட்டும் வாழ்தல்
தவறுதக் கோர்கட்' கென்றே,
இனிக்காத தெனினும் ஏற்பார்
ஏற்றத்தைச் சான்றோர் , என்றும்
எனக்காக எதுவு மில்லா
தினத்தனல் லாதி ருந்தும்
உனக்காக நான்போய்ப் பன்னா
ளுலகெலா மலைந்தோர்ந் துற்றேன்.