பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97



'பற்றுக ளென்ப தற்றுப்
பகவான்பா தங்கள் பற்றற்
குற்றிடும் முன்னுற் றேனின்
உளந்துாய்மை யுற்ற தாயின்,
அற்றது பிறவி, யன்றே
அமரனு மானா னென்பர்;
சற்றிது சிந்தித் துன்னைச்
சரிபார்த்துக் கொள்க நீயே!

'கரிக்குரு விக்குக் கண்ணைக்
கனிவுட னளித்துக் காத்தோன்,
நரிக்குற வன்கண் வாங்கி
நாயனா ராக்கினேன்; தான்
சிரிக்கிற சிரிப்பில், சேரார்
சேருமூ ரெரித்த தேவன்,
இருக்கிற இடம்சு வர்க்கம்’
என்பதே வேத வாக்கு!

மோசமாய் விற்பா னும்தான்
முச்சந்தி முனையில், முண்ட
நேசமாய்க் கடைதி றந்தால்,
நேர்ந்ததை வாங்க வந்தோன்
காசுமாய்க் கையாய்க் கேட்டால்,
கட்டியே தருவ தொப்பத்
தாசனாய்த் தொழுதால் தெய்வம்
தருவதேன் தரமாட் டாது?

தாழ்த்துவார், தம்மைத் தாமே
தாழ்தினே ராவர்; தப்பாய்
வீழ்த்துவார், தம்மைத் தாமே
வீழ்த்தினொ ராவர் ; வீம்பா
யாழ்த்துவார், தம்மைத் தாமே
ஆழ்த்தினே ராவர்; ஆயின்
வாழ்த்துவார், தம்மைத் தாமே
வாழ்தினொ ராதல் வாய்மை!