98
மலைத்திட வேண்டா மாலே !
மாதவம் புரிந்தா ரன்றி
யலைத்திடும் பிறவி யாமிவ்
வாழ்கடல் கடந்தோர் யாரே ?
தொலைத்திட வேண்டும் தொற்றுத்
தொடர்புக ளனைத்தை யும்; நீ
நிலைத்திட வேண்டும் நெஞ்சில்
நிர்மலன் பாதம் நேர்ந்தே !
'அறவினை யென்ப தெல்லாம்
ஆய்ந்துநம் மகத்திற் கொண்டு
மறவினை யனைத்தும் மற்றிம்
மண்ணிடை யிட்டு மூடி
'யுறவினை யுளத்தி லொட்டா
தொதுக்கிவிட் டொருமை யொன்றித்
துறவினைத் தொடங்கு' கென்னும்
தூயர்சொல் துணையா கும்மே!
'சுரத்தாகத் தலைம ழித்துச்
சுதைதொட்டுத் தடவிக் கொள்ளல்
மரத்துக்கும் மனித னுக்கும்
மரபெ’ன மறைநூல் கூறும் !
தரத்தினில் தாழ்ந்த திங்குன்
தலைமொட்டை யாதல் கண்டால்
பருத்தியா யென்னைப் பிய்த்துப்
படுநாசப் படுத்தப் பார்க்கும்!
குரைத்திடும் குச்சு நாயாய்க்
கூக்குரல் கிளப்பு மேனும்,
உரைத்திட வுள்ள தெல்லாம்
உண்மையா யுரைத்தேன் நானும்;
வரைத்தடந் தோள்வாய்த் திங்கிவ
வையமா ளரசற் கேனும்
சிரைத்திடி னன்றிக் கூடாச்
செய்தவப் பயனும் ஞானம்.