102
'குயிலாகி யிருப்ப தால்தான்
குந்தியுள் ளேன்நா னிங்கே;
வெயிலாகி யிருக்கும் வேளை
விரிநிழல் புதரை வேட்கும்
முயலாகி யிருந்தி ருந்தால்,
மோசம்செய் கின்ற புல்மேல்
புயலாகிப் பாய்ந்து பல்லால்
பொசுக்கிமாய்த் திருப்பே' னென்னும்!
'தஞ்சுக மனைத்து மாலின்
தயவினால் தானென் றேர்ந்த
அஞ்சுக மழுத தாம், 'ஒ
ஆலேயிஃ தவல மந்தோ!
நஞ்சக மான புல்சொல்
நரகவா சம்தா' னென்றே
நெஞ்சுகு மாறு கெஞ்சி
நினைவும்தப் பிற்றே மன்றே!
துளியுன்னி யஞ்சி வந்து
துணை, நட்பு சுற்றம் சூழ
வளியுன்னி யசைக்கு மாலில்
வசதியாய் வைகும் வண்டு,
'களி' யென்னப் 'புல்சொல் கேட்டால்
கவிழ்ந்தாய்நீ கவிழ்ந்தா'
யென்றே அளியுன்னிப் பன்னி பன்னி
யறிவித்த தாம், பண் ணாக்கி!...
"கள்ளமில் லாமல் வந்திக்
காட்டானின் வீட்டில் குந்தி
யுள்ளமில் லாதென் னுள்ளத்
துள்ளதை யுவந்து மேயும்
புள்ளிமா னே! போய் நீயும்
புரிந்திடப் புகன்று விட்டுத்
துள்ளிவா நாளை நின்று,
தொடர்ந்துநா னுரைப்பே" னென்றேன்.