உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103




வேலென்று விளம்பி னும், சொல்
வீணாகு முவமை யொவ்வா!
சேலென்று செப்பி னும், சொல்
சிறிதொத்துப் பெரிதொவ் வாக்கண்
நூலொன்றக் கோத்த முத்து
நுனிகழன் றென, நீர் சிந்தி,
"ஆலன்று புல்லுக் கென்ன
அறிவித்த தென்றா ளல்லி!

"கல்விதா னில்லா வாழ்வு
கண்ணில்லா வாழ்வா யவ்வால்,
பல்வித மாய்மற் றெண்ணிப்
பதறிக்கொண் டிருக்கட் டும்; நீ
கொல்வது போலிங் கென்னைக்
கூர்ந்துநோக் காதே, அல்லி!
சொல்வது,- சொல்லி யின்று
சோர்ந்துபோ யுள்ளே" னென்றேன்.

யாதினிச் செய்வ தென்றங்
கழுங்கவே ஆலே வைத்து,
வேதனைப் படவே யென்னை
வெளியேற்றி விடுவீ ராம்கொல்!
மாதினை மறுக வைத்தல்
மகத்தான பாவ மா' மென்
நாதனே! நவில்க! தாங்கேன்
நவில்கநீ" ரென்றாள், நங்கை!

அழகினை யருந்தக் காட்டி
ஆடவ னகத்தைப் பற்றிப்
பழகின யானை யாக்கிப்
 பாகய்ைப் பணிவிக் காதே !
முழுகின தில்லை யிங்குன்
முத்தத்தைப் பெறுமுன், முற்றும்
முழுகினுக் கிரையா மாறு
கசக்காதே யெனை நீ, யென்றேன்.