பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104


"திப்பட அடுப்பெ ரித்துத்
தின்பண்டம் தேர்ந்து பண்ணிக்
காப்பிடம் படுத்தி, நம்மைக்
கனிவாகப் பயந்த அன்னை
சாப்பிட வரலா" மென்று
சாந்தமாய்ப் பரிவு கூர்ந்து
கூப்பிடும் போது போய்நற்
குழந்தைகள் புசிப்ப" தென்றாள்.

ஈயாம லிருந்தா லென்னும்
இச்சொலை யெனது நெஞ்சம்
ஆயாம லிருந்தா லுன்றன்
அம்பெனும் விழியென் மீது
பாயாம லிருந்தால், பாய்ந்து
பதறியே எனது சீவன்
தேயாம லிருந்தா லந்நாள்
தேவைதா னெனக்கு" மென்றேன்