உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

அருவமாம் பருப்பொ ருள்தான்
அணுக்கள்கூட் டணுக்க ளாகித்
திரவமாய்த் தீயாய்க் காற்றாய்த்
திடம்ரசா யனமாய்ச் சேர்ந்தே
யுருவமா யுயிரா யொன்றி,
யுதித்திருந் தோய்ந்து மாயும்
பருவமாய்ச் - சித்த சித்தாம் -
பரம், 'தத்வ மசி'யென் பாரே!

என்றதும் எழுந்தாங் கல்லி
என்னையுற் றிறுகக் கட்டி
'நன்றிது நன்றி' தென்றே
நயந்துபா ராட்டும் நல்கி,
'இன்றுநா மிரண்டற் றொன்றி
யிணைகின்றோ' மென்று கூறி, -
அன்றவ ள்ளித்த முத்தம்
அமிழ்தினும் இனித்த தொன்றே !