உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரிசு

I. ஆலும் அறுகும்

ஆலொன்றும், அறுகொன் றும்மற்
றனுதின மமைந்தன் பாகப்
பாலொன்றிப் பழமு மொன்றிப்
பசியொன்றிப் பருகல் போன்றே,
நூலொன்றி நுகர்ந்த யாவும்
நுவலவும் கேட்க வும், மெய்ம்
மேலொன்றிப் புளகம் போர்க்க
மிகமிக மகிழும் நாளும் !

'கூனுடம் பெ'ன்ற போதும்
'குருடெ'னப் பிறந்த போதும்
ஊனுடம் போடி ருந்தும்
ஊமையாய்த் திரிந்த போதும்,
தானிட மின்றித் தங்கித்
தரணியி லொன்றி வாழும்
மானுடப் பிறவி மட்டும்
'மகத்தான தென்பர்' மாந்தர் !