11
4. எதிரும் புதிரும்
கள்ளூரும் கமலங் கண்டு களிவண்டு மதுவுண் டென்ன, அள்ளூர்நன் முல்லை யாரின் அருந்தமிழ்ப் பாவி லன்றும் உள்ளுறு முவப்போ டொன்றி உறிஞிடும் பொழுதங் குற்றுப் புள்ளாரும் கூந்தல் பொன்மான் புகுந்தாள்,புன் முறுவல் பூத்தே !
"அடைநோகப் பூத்த லர்ந்த அரவிந்த மனைய வொண்கண் கடைநோக வழியைக் கண்டும், கனக்கும்பைங் குரும்பை தாங்கா திடைநோகக் குழிமே டேறி யிறங்கியே நடந்து வந்தும், துடைநோகு மாறிங் குற்றாய் தோகையே துயரோ ராதே !
"ஒளிக்கொன்றும்முத்துப்பல்,கை,
யுவக்கவே காட்டிக் கூப்பும் கிளிக்கின்று வந்தால் குந்தக் கிளையுண்டென் றுரைத்தோர் தான்யார் ?
அளிக்கென்றும் மதுநல் காமல் அந்திப்போ தலர்ந்த அல்லீ ! களிக்கின்ற விதமிங் குற்ற காரண மதுயா" தென்றேன்.
"யோசித்துப் பார்த்தே னுான்றி, ஊணுறக் கம்விட் டின்றும் ! யாசித்து வந்தே னுக்கன்
றகம் நனி மகிழ, ஆண்பெண் நேசித்து வாழும் வாழ்வென் நினைவிலே பதித்தீர் ; நேரத் தேசத்தில், 'கவிஞர் வாக்கே தெய்வ வாக்" கென்பர், தேர்ந்தோர் !