இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
26
நினைத்தது வேறய் நேற்று
நேர்ந்தது வேற யின்று,
மனைத்தலம் புகுந்த மாதின்
மனமில்வா றயிற் றென்றே,
கனத்ததென் னுள்ளம்; கண்டு
கவிழ்ந்ததென் தலையும்; கல்வித்
தனித்துவம் தவறிக் கெட்டுத்
தகுதிதாழ் வுற்ற தென்றே.
அன்னையி னன்பொன் றன்றி
அருகொரு துணைகா ணுதாள்
தன்னையும் , தமிழ்கற் பித்துத்
தரணிபோற் றிடச்செய் யாநான்
‘புன்னையி லுள்ள பொந்தே
புக’லெனும் கிளியைக் கொள்ளற்
கென்னையோர் பூனை யாக்கற்
கிசைத்ததென் பருவங் கொல்லோ?