27
8. அளவளாதல்
மருண்டமான் கண்ணி நாளும்
மனத்திலே மகிழ்ச்சி மன்ன,
இரண்டொரு மாத மிவ்வா
றியல்பாகக் கழிந்த தன்பின்
பிரண்டுளம் பிழிந்தெ டுக்கப்
பேசினே னெருநாள்; பேணத்
தெருண்டமே லோன்போன் றிந்தத்
தெரிவையைத் தேரு மாறே!
“கல்லூரிக் கல்வி கற்ற
கன்னிநீ யல்லி! யென்னை
நல்லோர்க்குள் ளொருவ னென்றே
நயந்துவந் துற்றய்! நானும்
சொல்லாருங் கவிதைக் கேற்பச்
சுவையூட்டக் கேட்கின் றேன்;நீ
‘ஒல்லேனென் னதின் றுன்னி
யுளந்திறந் துதவு கெ’ன்றே !
‘பெண்மையி னிதயத் தாழம்
பெருங்கடல் புரையு’ மென்றிம்
மண்மிசை மனித ரெல்லாம்
மனமொன்றிப் புகல்வார்; மற்றிவ்
வுண்மையை யுன்னைக் கொண்டின்
றுணரநான் விழைந்தே” னென்றேன்
வெண்மையில் செம்மை காணும்
வேற்கணள், விரும்பப் பார்த்தே,
“பந்தகப் பாங்கு பற்றப்
பதிசதி வாழ்வில் வந்த
குந்தக மிதுதான்; கூர்ந்து
குணங்குறிப் போர்ந்து கொள்ளான்
நொந்தகம் குன்றி, நோக
துவலுஞ்சொல்; நோலாச் சொல்!மற்
றந்தகன், யானை யைத்தொட்
டறிவுறுத் திட்ட தற்றே!