உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

48

கரும்பினைத் தின்னக் கூலிக்
காசினைக் கேட்போ னய்நீ
இரும்பினும் வலிய நெஞ்சோ
டெதிர்விளை வறியா துள்ளாய் !
‘சுரும்புனும், நறும லர்த்தேன்
சோலையில் தவம்செய்’ தென்பர் .
அரும்பும்நும் காதல் காலை ,
அலரும்புன் மாலைக்” கென்றள்.

காட்டியே கனிந்தின் றன்புக்
காதலைப் பேணச் செய்த
பாட்டியைப் பார்த்தேன்; பைம்பொன்
பாவையைப் பரிந்து பார்த்தேன்;
‘மாட்டியே வைத்தே னும்மை
மணமக’ னெனத்தன் வாயைக்
கூட்டியே முறுவல் செய்தாள்,
கொல்லும்வேல் கண்ணி யல்லி !