47
மச்சினில் பிறந்து ‘மான
மக'ளென மலர்ந்த நீயிக்
குச்சினி லிருந்து வாழக்
கோருவ துண்மை யாயின்,
நிச்சய முனக்கிக் குச்சு
நிறைவினை யளிக்கும், நெஞ்சத்
தச்சமு மைய மும்விட்
டமைதிகாத் திடுக’ என்றள்.
ஒய்ந்துபோ யுலையா தோம்ப
வுள்ளநல் லிலைப ழுத்துக்
காய்ந்துபோ குங்கால், கால்வாய்
கண்டநீர் கடுகி வந்து
பாய்ந்துபா வுதலைப் பார்த்துப்
பரவசப் படுத லன்றி,
யாய்ந்துபா ராது நீரை
யடைத்திடச் செடிசொல் லாதே!
வினைதேடி வந்தா ளில்லை;
விவரமற் றளு மில்லை!
சுனைதேடி வந்து சேர்ந்த
சுதந்திரப் புள்ளி மான்போல்
மனதேடி வந்தி ருக்கும்
மாண்டகு தெய்வ மாதை,
நனைதேடும் வண்டாய் நீயும்
நயந்துகொள் ளப்பா!” என்றள்.
சிந்திக்கத் தெரிந்த வன்நீ ;
செல்வியின் செவ்வி, சீராய்ச்
சந்திக்க வந்த அந்தச்
சமயத்தி லிருந்தா ராய்ந்தேன் !
வந்திக்கத் தகுந்த வாய்ச்சொல்,
வழக்கமும், செயலும் வாய்த்திங்
கந்திக்கு மதியன் னளுன்
னகத்திற்கோ ரணியா வாள்காண் !