46
14. ஆயாளின் அன்பு
பூணுதற் குரிய ளாமிப்
புலன்மகிழ் விக்கும் பொன்மேல்
நானுதற் குரிய தாமென்
நசையைநான் நலித்தேன், ‘நன்மை
காணுதற் குரிய காதல்
கருவிது கண்டு காத்துப்
பேணுதற் குரிய தாயின்
பெரியோரே பிணைக்க’ வென்றே,
ஏவன விழிக்கி ளிக்கென்
னிதயத்தி லிருப்ப தீயா
தாவன அறிந்து செய்யும்
ஆயாள்தன் னகத்தி லாய்ந்து
மேவின அனைத்தும் தானய்
மேலெழா அளவும், மீறிச்
சாவென வந்த போதும்
சகிப்பதே சரியென் றேர்ந்தே !
“வேகாத வெயிலில், வேடன்
வில்லினல் விரட்ட வே,தன்
நோகாத மேனி நொந்து
நுழைந்தபொற் கிளியைச் சொல்லால்
சாகாத விதமாய்ச் சாடிச்
சதுரங்க மாடின் நீயும்
ஆகாத தாய்ப்போ” மென்றன்
றருகில்வந் தமர்ந்தா ளாயும் !
அல்லியின் கையைப் பற்றி
அகம்மலர்ந் தமர்த்திக் கொண்டு,
மெல்லவே முதுகில் தட்டி
மிருதுவாய்க் கன்னம் நீவிக்
‘கொல்லவே வந்த பூனைக்
கொடுமையைத் தடுத்துக் காத்த
இல்லிது கிளியே ! மாற்றிவ்
விடமுன்னை யேமாற் றது !