பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

45

உள்ளத்தி லொளித்து வைத்த
உணர்ச்சிக ளுருக்கிச் சொல்லாய்
வள்ளத்தில் வடித்த நெய்போல்
வார்த்தாளென் செவியி லேனும்,
கள்ளத்தி லுள்ளம் வைத்தென்
கருத்தினைக் காட்டா மல்நான்,
குள்ளத்தி லுயரம் கூட்டும்
கோலத்தில் கூற லுற்றேன்:

“என்புறு முடலி லேங்கும்
இதயத்தி லெனைவைத் துகொண்
டன்புறப் பேசும் அல்லி!
அறிவார்ந்த உன்சொல் லெல்லாம்,
துன்புறு மகளி ருள்ளம்
துலங்கிடற் குரிய தாக்கி
இன்புற எனது நூலில்
இணைத்திடற் குதவு” மென்றே.

“செம்பிராச் சாலுக் கில்லை
சிறப்பெனச் சிறந்தோர் சொல்வர்.
கம்பரே—யன்றேல், காசில்
கவிகாளி தாச னன்றேல்,
அம்பறத் துாணி தாங்கி
யமர்க்களம் சென்று வெல்லும்
கொம்பரே யாகித் தான்நீர்
கொள்வதிங் கெதுவு மில்லை!

தேயாத சந்த னக்கோல்
தெளிவிக்காக் கல்வி கேள்வி;
பாயாத தண்ணிர், —இன்ன
பயனுற வாறய்ப் பாரில்
‘மாயாத போதே மாய்ந்தார்,
மகவாகி மாற தோ’ரென்
றேயாது கூறும் கண்டீர்!
ஒர்ந்தநல் லோர்நூ” லென்றள்!