44
நிந்தையில் லாதோன், நேர்ந்து
நிலையாக மேய்த்துக் காக்கும்
மந்தையில் மலிந்த மாட்டை
மறுகவோட் டிப்போய் மற்றச்
சந்தையில் விற்குங் கால்,‘நான்
சாதென லுண்மை யாயின்,
சிந்தையில் செறுக்கில் லான்கை
சேர்ப்பிக்க, எனுமாம் சேர்ந்தே !
‘கல்லொன்றிக் கவினென் றது
காணினும் கருணை கூர்ந்து
புல்லொன்று மாற யென்னைப்
பொட்டலாக் காதீர் ! போற்றும்
சொல்லொன்றும் நல்லோர் தின்று
சுகிக்கவே மா,ப லாவா
யெல்லொன்ற நடுவீ ’ ரென்றே
இயம்புமாம் புன்செய் யேத்தி !
குருவாகக் குரிசி லாகக்
குடிமக னகக் குந்திப்
பரிவாகக் கவிதை பாடும்
பாவல, னகப் பாங்கின்
‘மருவாகி மகிழத் தக்க
மாப்பிள்ளை’ யெனம திக்க
வுருவானீ ருமைவிட் டிங்கென்
னுயிர்வாழ வுளமொப் பாதே !
ஒப்பேதும் தப்பா தொன்றி
யுயிருக்கோ ருயிரா யுள்ளீர் !
இப்போது வானில் மேகம்
இல்லாம லிருக்கு மேனும்
எப்போது மிப்போ தேபோ
லிருக்குமென் றியம்ப லாமோ ?
தப்பாது தரணி தாகம்
தணிக்கும்போ தொன்றுண்” டென்றள்.