43
13. கற்பு நிலை
“சந்துவிட் டால்சற் றங்கே
சரசர வென்றப் போதே
‘வந்துவிட் டேன்நா’ னென்றே
வதனத்தை மலர்த்து கின்றய்!
நொந்துவிட் டோர்க்காய் நானும்
நோற்கின்ற நோன்பை நீயும்
சிந்திவிட் டால்,மற் றென்றன்
சிந்தைநோய் தீரா” தென்றேன்.
“சேய்மையைப் பற்றிச் சற்றும்
சிந்தித்துப் பாரா தீர்நீர்!
தாய்மையைப் பற்றி முற்றும்
தவறன பொருள்கொண் டுள்ளிர்!
வாய்மையை வாழ்வில் வைக்கும்
வரனைத்தம் வயிற்றில் வைக்கத்
தூய்மையைக் கற்பாய்க் காத்துத்
தோகையர் நோற்ப தென்றும்!
நூன்மோக ராகிக் கற்றும்
நுணுகியாய்ந் தறிந்து நோலார்,
வான்மீகி கதையில் வைத்து
வழங்கவே வந்த ராமன்
கான்மோக ராய்க்கை கூப்பிக்
கல்லைக்கும் பிடுவார் தம்கண்
ஆன்மீக மென்னும் சொல்லின்
அரும்பொரு ளதைக்கா ணதே!
கலைநோக்க மற்றுக் கல்வி
கற்றவர் கடைய ராகிச்
சிலைநோக்கி யும்சே விக்கார்,
செல்வியர் திரண்ட கொங்கை
நிலைநோக்கி, நெகிழ்வு நோக்கும்
நீசர்தம் நெஞ்சில் நின்ற
புலைநோக்கை வெறுத்துப் போந்துப்
புனிதனைப் பூசிப் பேன், நான்!